உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் ஓவியம் - அணிகலன்கள்

/87

செய்வித்துப் பாராட்டினான். “நீர் சிறந்த சிவபக்தர். இனி நீர் எமது அவைப் புலவர் அல்லீர். எம்பெருமான் சொக்கநாதருடைய இசைப் புலவர் ஆவீர்" என்று கூறி அனுப்பினான்.

அன்று முதல், பாணபத்திரர் பாண்டியன் சபைக்குச் செல்லாமல், சொக்கப் பெருமான் கோயிலில் சென்று நாள் தோறும் பக்தியோடு சொக்கப் பெருமான் மீது இசை பாடினார். அரசர் அளித்து வந்த ஊதியம் நிறுத்தப்பட்டபடியால், அவர் வறுமை யடைந்தார். நாள் செல்லச் செல்ல வறுமைத் துன்பம் அவரை வாட்டியது. ஆயினும், ஆலயத்தில் நாள் தவறாமல் இசை பாடிக்கொண்டிருந்தார். இவருடைய வறுமைத் துன்பத்தை யறிந்த சிவபெருமான், சிறந்த சிவபக்தரும் சேரநாட்டு மன்னரும் ஆகிய சேரமான் பெருமாளுக்குத் திருமுகம் ஒன்று எழுதிக் கொடுத்துப் பாணபத்திரரைச் சேரமானிடம் அனுப்பினார்.

சொக்கப் பெருமான் அனுப்பிய திருமுகத்தைக் கண்டு சிவபக்தராகிய சேரமான் பெருமாள் இசைப்புலவருக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார். அப்பெரும் பொருளைக் கொண்டு பாணபத்திரர் வறுமை நீங்கிச் சுகமாக வாழ்ந்து வந்தார். ஆனால், சொக்கநாதர் ஆலயத்தில் யாழ்வாசித்து இசைபாடும் திருப்பணியை விடாமல் செய்து வந்தார்.

ஒரு சமயம் பெருமழை பெய்தது. பூமி குளிர்ந்தது. சில்லென்று காற்றுடன் விடா மழை பெய்தது. பாணபத்திரர் அப்போதும் சொக்கர் ஆலயத்தில் யாழ்வாசித்துப் பக்தியோடு இசை பாடினார். ஈரத்தில் நின்றிருந்தபடியால் அவர் உடல் சில்லிட்டுச் சிலிர்த்தது. யாழ் நரம்புகள் வீக்கழிந்தன. அப்போது, “பத்திரனுக்குப் பலகை இடுக” என்று ஒரு குரல் கேட்டது. அங்கிருந்தவர் அவ்வாறே பலகை இட்டனர். பத்திரர் பலகைமேல் நின்று இசை பாடினார். ட பாணபத்திரருடைய மனைவியாரும் இசைக் கலையில் தேர்ந்தவர் என்பதை இசைவாது வென்ற திருவிளையாடலிலிருந் அறிகிறோம்.

இந்த இசைச் செய்திகளைத் திருவிளையாடற் புராணங்களிலும் பெரிய புராணத்திலும் காணலாம். பெரும் பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், சாதாரி பாடின திருவிளையாடல், திருமுகங்கொடுத்த திருவிளையாடல், பலகையிட்ட திருவிளையாடல் என்னும் மூன்று அதிகாரங்களிலும், பரஞ் சோதி