உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் -அணிகலன்கள்

95

பண்ணிலக்கணம் பதினொன்றையும் நிரம்ப வைத்து; வார நிலத்தைக் கேடின்று வளர்த்து - முதனடை வாரம் கூடை திறள் என்று சொல்லப்படும் இயக்கம் நான்கினும் முதனடை மிகவும் தாழ்ந்த செலவினை உடைத்தாகலானும், திரள் மிகவும் முடுகிய நடையினை உடைத்தாகலானும், இவை தவிர்த்து இடைப்பட்ட வாரப்பாடல் சொல்லொழுக்கமும் யொழுக்கமுடைத்தாகலானும்,

இசை

கடைப்பாடல் சொற்செறிவும் இசைச் சொறிவும் உடைத்தாகலானும் சிறப்பு நோக்கி அவ்விரண்டினுள்ளும் வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்த வல்லனாய்; எனவே கூடைப் பாடலும் அமைவதாயிற்று. நிலம் இடம். ஆங்கு ஈர நிலத்தின் எழுத்தெழுத்தாக - பாடலினிடத்துச் சொன்னீர்மைகளின் எழுத்துக்கள் சிதையாமலே எழுத்தெழுத்தாக இசைக்குங் குழலோன். அன்றியும் சரிகமபதநி யென்பாருமுளர். ழுஇன்றி இசைக்கும் குழலோன் - இச்சொல்லப்பட்ட இயல்புகளை இலக்கணப்பட்டியே வழுவாமல் வாசித்துக காட்டவல்ல வங்கியத்தான்.

குழல வாசிப்போன் இவ்வாறு மற்ற இசையுடன் பொருந்தக் குழல் வாசிக்க வேண்டும் என்பதை இது நன்றாக எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறே மற்ற இசைவாணரின் இலக்கணத்தையும் சிலம்பு (அரங்கேற்று காதையில்) கூறுகிறது.