உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைய மகளிர் பந்தாட்டம்

இக்காலத்திலே நமது நாட்டுப் பெண் மகளிர் ஆடும் விளையாட்டுகளில் பந்தாட்டமும் ஒன்று. உடல் நலத்துக்காகவும் பொழுது போக்குக்காகவும் பெண்மகளிர் பந்து ஆடி வருகிறார்கள். இதுபோன்று, பண்டைக்காலத்துப் பெண்மணிகளும் பந்து விளையாடி மகிழ்ந்தனர். பண்டைக் காலத்துப பெண்மணிகள் பந்து ஆடிய செய்தியைப் பழந்தமிழ் இலக்கியங்கள் இனிய செய்யுள்களாலே கூறுகின்றன. வசந்தவல்லி என்னும் பெண்மணி பந்து அடித்து விளையாடியதைக் குற்றாலக் குறவஞ்சி என்னும் நூல் கூறுகிறது. பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை

புரண்டு புரண்டாட - குழல்

மங்குலில் வண்டு கலைந்ததுகண்டு மதன்சிலை வண்டோட - இனி

இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்னிடை திண்டாட - மலர்ப்

பங்கய மங்கை வசந்த சௌந்தரி

பந்து பயின்றனளே.

சோதிமலை என்னும் அரசகுமாரி, தன் தோழியரோடு பந்தாடியதைச் சூளாமணி என்னும் காவியம் கீழ்வருமாறு கூறுகிறது: கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை

கருமேகக் குழல்மடவார் கைசோர்ந்து நிற்பக் கொந்தாடும் பூங்குழலும் கோதைகளும் ஆடக்

கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட

வந்தாடும் தேனும்முரல் வரிவண்டும் ஆட

மணிவடமும் பொன்ஞாணும் திருமார்பில் ஆடப்