உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பொங்கிமீ தெழுந்துபோய்ப் பிறழ்ந்துபாய்த லின்றியே செங்கயற்கண் புருவந்தம்முள் உருவஞ்செய்யத் திரியுமே மாலையுட் கரந்தபந்து வந்துகைத் தலத்தவாம் ஏலநா றிருங்குழல் புறத்தவாண் முகத்தவாம் நூலிலேர் நுசுப்புநோவ வுச்சிமாலை யுள்ளவாம் மேலெழுத்த மீநிலத்தை விரலசைய ஆடுமே

கொண்டுநீங்கல் கோதைவேய்தல் குங்குமம் அணிந்துராய் எண்டிசையும் ஏணியேற்று இலங்கநிற்றல் பத்தியின் மண்டலம் வரப்புடைத்தல் மயிலிற்பொங்கி இன்னணம் வண்டுந்தேனும் பாடமாதர் பந்துமைந்துற் றாடுமே”.

அவர்கள் ஆடிய பந்தாட்டத்தின் முறையை இப்போது தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரும் தமது ஆட்டத்தில் ஆயிரம் கை, மூவாயிரம் கை, ஆறாயிரம் கை என்று கணக்கெடுப் பார்கள். யார் அதிக எண் கணக் கேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர் ஆவர். இந்தப் பந்தாட்டத்தை அக்காலத்தில் மணம் ஆகாத பெண்மணிகள் மட்டுமே ஆடினார்கள் என்று தோன்றுகிறது.

பெருங்கதை என்னும் நூலிலே வத்தவ காண்டத்திலே பந்தடி கண்டது என்னும் ஒரு பகுதியுண்டு. அதில் பெண்மணிகள் சிலர் பந்தாடிய செய்தி கூறப்படுகிறது. வாசவதத்தை, பதுமாவதி என்னும் இரண்டு அரசிகள் பந்தாட்டம் காண்பதற்காகத் தமது தோழி மாருடன் சென்று அரண்மனையின் நிலா முற்றத்திலே அமர்ந்தனர். அப்போது இராசனை என்னும் பெண்மணி முற்றத்தின் நடுவில் வந்து நின்று, 'கண் இமையாமல் கணக்கெடுங்கள்' என்று கூறிப் பந்தாடத் தொடங்கினாள். 'கண்ணிமை யாமல் எண்ணுமின் என்று

66

வண்ண மேகலை வளையொடு சிலம்பப் பாடகக் கால்மிசை பரிந்தவை விடுத்தும் சூடக முன்கையில் சுழன்றுமா றடித்தும் அடித்த பந்துகள் அங்கையில் அடக்கியும் மறித்துத் தட்டியும் தனித்தனி போக்கியும் பாயிர மின்றிப் பல்கலன் ஒலிப்ப ஆயிரம்கை நனி அடித்தவள் அகன்றாள்'

99