உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

103

அச்சிட்டிருக்கிறார்கள். நாம் இங்கு அச்சிட்டிருப்பது, அரசாங்கத்தார் பதிப்பித்துள்ள வாசகம். மறைந்த எழுத்துக்களும் சொற்களும் விடுபட்டுள்ளன. பிழைகளும் திருத்தப்படவில்லை.

இக்கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களிற் சில இலக்கண வரம்புக்கு மாறுபட்டுள்ளன. 13-வது செய்யுளின் முதல் அடியில் 20 எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறே சில செய்யுட்கள் கட்டளைக் கலித்துறை இலக்கணத்துக்கு மாறுபட்டு எழுத்துக்கள் குறைந்தும் அதிகப்பட்டும் உள்ளன. இது சாசனச் செய்யுளைச் செதுக்கிய சிற்பியின் தவறு என்று தோன்றுகிறது.

திருச்சிராப்பள்ளி மலைமேல், மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவிலின் சுவரில் இச் சாசனக் கவிகள் எழுதப்பட்டுள்ளன. இக்காலத்துத் “தொடர்” என்று வழங்கும் சொல் இச் செய்யுள்களில் “துடர்” என்று பயின்றிருக்கிறது.

நக்கன் திருவேகம்பன்

இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா, உய்யக்கொண்டான் திருமலை. இவ்வூர் உஜ்ஜீவ நாத சுவாமி கோவிலின் முதல் பிராகாரத்து வெளிப்புறச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு : எண் 545. (No. 545. S. I. I. Vol. IV.)

விளக்கம் : “வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும்” என்று தொடங்குகிற சாசனத்தின் இறுதியில் இந்தச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனமும் செய்யுளும், கோவிராஜ கேசரி பன்மரான வீர ராஜேந்திர தேவரின் 5-வது ஆண்டில் எழுதப்பட்டன. கருப்பூர் கம்பன் மகனான நக்கன் என்பவர், இக் கோவிலுக்கு விளக்கு ஏற்றுவதற்காகத் தொண்ணூறு ஆடுகளைத் தானம் செய்ததை இச்செய்யுள் கூறுகிறது. கோவில்களில் ஆட்டு நெய்யினால் விளக்கெரிப்பது அக்காலத்து வழக்கம்.