உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

கருப்பூர்மன் கம்பனுக்குக் காதலன்சீர் நக்கன் விருப்பூர் விழுமிய தேவர்க்கு - திருப்பூர்

விளக்குவைத்துத் தொண்ணூறா டாங்களித்தான் மெய்யே உளக்கருத்தால் சால உகந்து.

குறிப்பு :- கருப்பூர் - இது சோழநாட்டு உறையூர்க் கூற்றத்துக் கருப்பூர். கம்பன் - கருப்பூர் உடையான் ஏகம்பன். காதலன் - மகன். நக்கன் - இவன், கருப்பூருடையான் ஏகம்பனின் மகனான நக்கன் திருவேகம்பமுடையான். இவனுக்குக் கேரளாந்தக விழுப்பரையன் என்னும் பெயரும் உண்டு. விழுமிய தேவர் திருக்கற்குடி விழுமியதேவர் என்னும் பெயருள்ள சிவபெருமான். கற்குடி விழுமியார் கோவில், இப்போது உஜ்ஜீவநாத சுவாமி கோவில் என்று வழங்குகிறது.

பத்மநாப நாராயணன்

இடம் : திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி தாலுகா, அன்பில் கிராமம், சுந்தரராஜப்பெருமாள் கோவில் மேற்க்குப்புறத்துச் சுவரில் உள்ள சாசனச் செய்யுள்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு : எண் 186. (No. 186. S. I. I. Vol. VIII.)

விளக்கம் : பத்மநாப நாராயணன் என்பவர் இந்தக் கோவிலுக்கு எண்பது கலம் நெல் விளையக் கூடிய மும்மா நிலத்தைத் தானம் செய்ததையும் அதனைக் கோவிலின் சார்பாக அரும்பாளூரார் ஏற்றுக் கொண்டதையும் இந்தச் செய்யுள் கூறுகிறது.

சாசனச் செய்யுள்

இற்புகலோடை மும்மாச் செய்க் கெண்பதின்கல னெல்லுப் பொலிசைக் கொத்து கல்நிலைக்க - பற்பனாப னாராயணன் வைத்தானாங் கரும்பா ளூரோங்கொண் டூராயிறை யிறுப்போ முற்று.

குறிப்பு :- செய் - வயல். பொலிசை - பலிசை, வட்டி.