உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -14

குறிப்பு பழந்தமிழரின் போர் முறையிலே, உழிஞைத் திணையில் வாண்மண்ணுநிலை என்னும் ஒரு துறை உண்டு. அது, புறப்பொருள் வெண்பாமாலையில் (உழிஞைப் படலம், வாண்மண்ணு நிலையில்) இவ்வாறு கூறப்படுகிறது :

"புண்ணிய நீரிற் புரையோ ரேத்த

மண்ணிய வாளின் மறங்கிளர்ந் தன்று.”

'உயர்ந்தோர் துதிப்பத் தீர்த்த நீராலே மஞ்சனமாட்டிய வாளினது வீரத்தைச் சொல்லியது.' (பழைய உரை)

"தீர்த்தநீர் பூவொடு பெய்துதிசை விளங்கக் கூர்த்தவாள் மண்ணிக் கொடித்தேரான் - பேர்த்து

மிடியார் பணைதுவைப்ப இம்மதிலுள் வேட்டான் புடையா ரறையப் புகழ்.”

தீர்த்த நீரும் மலருஞ் சொரிந்து திக்கு விளங்கக் கூரிய வாளினை மஞ்சனமாட்டிப் பதாகையாற் சிறந்த தேரினையுடையான் இரண்டாவதும் உருமேற்றையொக்கும் வீரமுரசு ஆர்ப்ப இந்த அரணிடத்தே களவேள்வி வேட்டான், பக்கத்துள்ள மன்னரெல்லாம் தன் கீர்த்தியைச் சொல்ல.' (பழைய உரை)

தொல்காப்பியம், பொருளதிகாரம், புறத்திணையியல், 68-ஆம் சூத்திரத்தில் கூறப்படுகிற வாள்மண்ணுதல், வாண் மங்கலம் என்பதையும் காண்க. கீழ்க்கண்ட ஆங்கில வெளியீடுகளில் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளையும் காண்க. Balgalchchu, Epigraphia Indica Vol. VI. Page 55; A note on the word Balgalchchu, The Indian Anti- quary Vol. XL (1911) P. 98.

தாமோதரன்

இடம் : திருவாங்கூரைச் சேர்ந்த வாழ்விச்ச கோட்டம். என்னும் ஊரில் உள்ள பகவதிகோவில் வட்டெழுத்துச் சாசனம்.

பதிப்பு : திருவாங்கூர் சாசனங்கள்: தொகுதி ஆறு,எண்126.

(No. 126. T. A. S. Vol. VI. Part II. )