உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

20 குவளாலத் தேரிதனில் உத்தமத்தே நீர்நில மற்றொரு வெலயு மாளு

25

சோலை யதனுக்கு வடமேற்கே விடுவித்துத் திருச்செல்வம் பல பெருக்கிச்

சி . . லியு முப்பொழுதுங் கருத்தமைய வெழுந் தருளும்படி நிமந்தங் கட்டுவித்துச் சந்திரா தித்தவரை திருப்புகழ் நிறுத்தி நிந்த ளுரிலத் தினிதுவாழ் கெனவே.

ஸ்ரீ மாஹேஸ்வரரும் ஐந்நூற்றுவரும் ரக்ஷை.

141

குறிப்பு :- வரி 4. குவளால் மாநகரம், இப்போது கோலார் என்று வழங்கப்படுகிறது. வரி 21. வெலயுமாளுசோலை என்னும் சொல்லின் சரியான உருவம் தெரியவில்லை. கடைசி வரியில், நிந்தளுரிலத்தினிது என்றிருப்பது, ‘இந்த நானிலத் தினிது' என்றிருக்க வேண்டும்.

செட்டிதேவன்

இடம் : மைசூர், சிந்தாமணி தாலுகா, உபாரப்பேட்டைக் கிராமத்தில் உள்ள சாசனச் செய்யுள்.

பதிப்பு : கர்னாடக சாசனங்கள், பத்தாந் தொகுதி: கிரந்த - தமிழ் சாசனங்கள் சிந்தாமணி தாலுகா, எண் 83. (Eipigraphia carnatica Vol. X. Inscriptions in Grantha and Tamil. No.83)

விளக்கம் : சக ஆண்டு 1101-இல் (கி.பி. 1179-இல்) செட்டி தேவன் என்பவர் தம் பெயரால் செட்டீச்சரம் என்னும் கோவில் அமைத்து அதில் சிவபெருமானை எழுந்தருளுவித்து அக் கோவிலுக்கு நிலபுலங்களைத் தானம் செய்ததைக் கூறுகிறது இந்தச் சாசனம்.

சாசனச் செய்யுள்

தேனாருஞ் செங்கமல மாதுபுணருந் தோளான் கானாரும் விந்தைமகன் காதலாம் பூநாடும்

வண்டறியாத் தாமரையோன் தன்மரபில் வந்துதித்த கண்டன் கவுண்டல்லிய கோத்திரத்தான் எண்டிசையும்