உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காரிக் கரை*

திருக்காரிக்கரை திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டத்துத் திருவள்ளூர் தாலுகாவில் இராமகிரி என்னுமிடத்தில் இருக்கிறது. திருக்காரிக்கரை என்னும் பழைய பெயர் மாறி, இப்போது இராமகிரி என்று பெயர் வழங்கப்படுகிறது. திருக்காரிக்கரை நாகலாபுரத்துக்கு அருகில் இருக்கிறது. நாகலாபுரத்திலிருந்து தும்பூரு கோனைக்கு போகிற இடைவழியில், திருக்காரிக்கரைக் கோவில் இருக்கிறது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் பெயர் வாலீசுவரர் என்பது. சாசன எழுத்துக்களில் 'திருக்காரிக்கரை உடைய நாயனார்' என்று பெயர் கூறப்படுகிறார். பழைய எழுத்துக்களிலே, “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ( தொண்டை மண்டலத்து)க் குன்ற வர்த்தனக் கோட்டத்து நின்றையூர் நாட்டுத் திருக்காரிக்கரை” என்று கூறப்படுகிறது.

சாசன

திருநாவுக்கரசு சுவாமிகள் திருக்காளத்திக்குச் சென்ற போது, போகிறவழியில் திருக்காரிகைக் கோவிலுக்கு வந்து, சிவபெருமானை வணங்கிச் சென்றார் என்று பெரிய புராணத்தினால் அறிகிறோம். “பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றடைவார் செல்கதிமுன் அளிப்பார்தம் திருக்காரிக்கரை பணிந்து தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின், உம்பர்குழாம் மல்குதிரு காளத்தி மாமலைவந் தெய்த்தினார்.”

(திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 343) இதனால், திருக்காரிக் கரை வாலீசுவரர் திருக்கோயில், மிகப் பழமையானது என்பது தெரிகின்றது.)

இந்தக் கோவிலிலே கல்வெட்டுச் சானங்கள் சில காணப் படுகின்றன. அவை கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலிருந்து எழுதப்பட்டது. அவை, இந்தக் கோவிலுக்கு நிலங்களும் ஆடு மாடுகளும் பொருள் களும் தானம் செய்யப்பட்டதைக் கூறுகின்றன.

  • திருக்கோயில் : மார்ச் 12:6, 1978.