உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

இந்த அரசனுடைய 32-வது ஆண்டில் எழுதப்பட்ட இரண்டு சாசனங்கள் (கி.பி. 1209 - 10). தனி நின்று வென்ற வீரநரசிங்க யாதவராயன், இந்தக் கோவிலில்சித்திரைத் திருநாள் உற்சவத்துக்கு நீர்வாயில் என்னும் ஊரைத் தேவதானமாகக் கொடுத்ததைக் கூறுகிறது. 'நீர்வாயில் காசாயம் பொன்னாயம் நெல்லாயம் உட்பட' விட்டதாகக் கூறுகிறது. (No. 696. S. I. I. Vol. XVII) இரண்டாவது சாசனம், திருக்கரிக்கரையுடைய பிள்ளையாருக்குப் பூசைக்கும் அமுது படிக்கும்" ஆக வேலூரும் சாத்தமங்கலமும் சூரலூர்த்தடையும் சர்வமானியமாகக் கொடுத்ததைக் கூறுகிறது. (No. 697. S. I. I. Vol.

XVII)

மூன்றாம் இராஜராஜசோழன் காலத்துச் சாசனங்கள் :-

ஆண்டில்

--

இவ்வரசனுடைய 10ஆம் கோயிலில் நந்தாவிளக்கு ஒன்றுக்காக திரண்டு பசுக்களை, நின்றையூர் நாட்டுக்கே தானம் கொடுத்ததைக் கூறுகிறது. (No. S. I. I. Vol. XVII)

இந்தச் சோழனுடைய 25 ஆம் ஆண்டு (கி.பி. 1240 - 41) எழுதப்பட்ட சாசனங்கள் காரிப்பிள்ளை என்பவர் மூன்று மானங் (பொற்காசு) இந்தக் கோவிலுக்கு தானம் செய்ததைக் கூறுகிறது. இந்த காசு வட்டியிலிருந்து ஒரு நந்தாவிளக்கு நாள் தோறும் ஏற்ற வேண்டுமென்று இந்தச் சாசனங் கூறுகிறது. (No. 712. S. I. I. Vol. XVII)

இவ்வரசனுடைய 27-ஆம் ஆண்டில் (கி.பி. 1242-43) எழுதப்பட்ட சாசனம் இக்கோவிலில் திருவிளக்கு ஏற்றுவதற்கு கோட்டூர் வடுகன் ஒன்றரை மா... பொன்னைத் தானம் செய்ததைக் கூறுகிறது (No. 710. S.I.I. Vol. XVII)

இவ்வரசனுடைய 29-ஆம் ஆண்டில் சாசனம் (கி.பி. 1245) கொட்டன் கிழவன் (கிழவன் தலைவன்) வடுக்கப்பன் என்னும் வயிராதராயன் இக்கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காகப் பதினாறு பொற்காசுகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. (No. 713. S. I. I. Vol. XVII)

1294

சாளுக்கிய வீர கண்ட கோபாலனுடைய 3-வது ஆண்டு (கி.பி. 49) வீரந்திர தேவனான யாதவராயரின் சேனாதிபதி விழுப்பதராயன் .இக்கோவிலுக்குப் பசு எருமைகளைத் தானஞ் செய்ததைக் கூறுகிறது. இவ் எருமைகளின் பாலிலிருந்து நெய் எடுத்துத் திருவிளக்கு ஏற்ற வேண்டுமென்று சாசனங்கள் கூறுகின்றன. (No. 716. S. I. I. Vol. XVII)