உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

(மூன்றாம் ஏடு, இரண்டாம் பக்கம்)

46. நான்கெல்லைக்குட்படப்பட்ட நிலம் முப்பத்தொன்றே முக்காலே இரண்டுமா முந்திரிகை இது அந்

47.

48.

49.

தராயமும் பன்மை பண்டவெட்டியும் மற்றும் எப்பேர்ப் பட்டதும் உட்பட இப்பள்ளிக்கே இறையி

லி குடுத்தோம் இப்படி செய்து குடுக்கவென்று திருவாய் மொழிந்தருளித்த திருமுகம் பிராசாதஞ்செய்தரு

ளி வந்தது. தாம்ர சாசனம் பண்ணிக் குடுக்கவென்று சந்துவிக்ரிஹகன் ராஜவல்லவப் பல்லவரையரும் அ 50. திகாரிகள் ராஜேந்திரசிங்க மூவேந்த வேளாரும் சொல்ல இத்தாம்ர சாசனம் எழுதி

51. னேன் உடக்கோடி விக்கிரமா பரணத் தெரிந்த வல வலங்கை வேளைக்காறரில் நிலையுடைய பணை

52. யான் நிகரிலி சோழன் மதுராந்தகனேன் இவை என்

எழுத்து.

குறிப்பு :- இந்தச் சாசனங்களில் குறிக்கப்பட்ட கடாஹ, கடாரம், கிடாரம் என்பன மலைய தீபகற்பகத்தில் உள்ள கடார தேசம் ஆகும். ப்போது இத் தேசம் கெடா (Keddah) என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீ விஷய என்றும், ஸ்ரீ விஜய என்றும் கூறப்படுகிற தேசம் சுமாத்திர தீவில் உள்ளது. இந்தத் தேசங்கள் சைலேந்திர அரசர்களால் ஆளப்பட்டன. சோழர்கள் கடல் கடந்து சென்று சைலேந்திர அரசர்களின் கடார தேசத்தையும் ஏனைய நாடுகளையும் வென்று அரசாண்டார்கள். இந்த வரலாற்றைச் சோழர் சரித்திரத்தில் காண்க.