உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நந்திவர்மன் காலத்துச் சாசனங்கள்*

2 - ஆம் ஆண்டு

வட ஆர்க்காடு மாவட்டம், வேலூர் தாலுகா, பள்ளி கொண்டை கிராமத்து நாகநாதேசுவரர் கோவில் முன் மண்டபத்துத் தூணில் உள்ள சாசனம்.

நந்தி போத்தரையரின் இரண்டாம் ஆண்டில் எழுதப்பட்ட இச்சாசனம், வித்தூரை ஆண்ட, அமணி கங்கரையர் மகன் செல்வ வாணரையன் என்பவர் முகமண்டபத்தைக் கட்டியதைக் கூறுகிறது. இப்போதைய பள்ளிக் கொண்டை கிராமத்தின் பழைய பெயர் வித்தூர் என்பது இச்சாசனத்தினால் தெரிகிறது.

சாசன வாசகம்1

1.

ஸ்ரீ நந்திப் போ

2.

த்தாயர்க்கு யா

3.

ண்டு இரண்டாவது

4.

அமணி கங்கரையர்

5.

மகன் செல்வவா

6.

ணரயன் வித்தூ

7.

8.

9.

ராண்டு செய்வித் தமுக மண்டக

ம்.

3 - ஆம் ஆண்டு

புதுக்கோட்டை குன்னாண்டார் கோவில் கிராமத்துப் பர்வதகிரீஸ்வரர் கோவிலின் தென்கோடியில் உள்ள சாசனம்.

  • மூன்றாம் நந்திவர்மன் (1958) நூலில் இடம் பெற்ற கட்டுரை.