உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

6 -ம் ஆண்டு

மூன்றாம் நந்தி வர்மனின் வேலூர்பாளையச் செப்பேடு

நந்திவர்மனின் 6-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச் சாசனம், சோழ மகாராஜன் குமாராங்குசன் விரும்பியபடி யஞ்ஞபட்டன் என்பவர் ஸ்ரீ காட்டுப்பள்ளியில் கட்டிய சிவன்கோயில் பூசைக் காகவும் அன்னசத்திரத்துக்காகவும் ஸ்ரீ காட்டுப்பள்ளியைத் தானம் செய்ததைக்

கூறுகிறது.

விஜய நந்தி வர்மனுடைய வேலூர்ப் பாளையத்து செப்பேட்டுச்

சாசனம்.9

வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்துக்கு வடமேற்கே 7 மைலுக்கப்பால் உள்ளது வேலூர்ப் பாளையம் என்னும் கிராமம். இந்தக் கிராமத்தில், 1911-ஆம் ஆண்டில், விஜயநந்தி வர்மனுடைய செப்பேட்டுச் சாசனம் கண்டுபிடிக்கப் பட்டது. பிறகு, இச்சாசனம் சென்னை அரசாங்கத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுச் சென்னைக் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. வேலூர்ப் பாளையத்திலிருந்து கிடைத்தபடியால் இது, வேலூர்ப் பாளையத்துச் செப்பேட்டுச் சாசனம் என்று பெயர் பெற்றது.

2

இந்தச் சாசனம் ஐந்து செப்பேடுகளைக் கொண்டது. இச் செப்பேடுகளின் முதல் பக்கமும் கடைசி பக்கமும் தவிர, மற்ற எட்டுப் பக்கங்களிலும் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. இச் செப்பேடுகள் ஏறக்குறைய 83/4 அங்குலம் நீளமும் 31/, அங்குலம் அகலமும் உள்ளவை. ஐந்து செப்பேடுகளும் ஒரு வளையத்தில் கோக்கப் பட்டுள்ளன. வளையத்தில் வட்டமாயமைந்த இவ்வரசனுடைய முத்திரை இருக்கிறது. இவ்வரசனுடைய ஆணைக்கு அடையாள மாகிய நந்தி (எருது) பருத்திருப்பது போன்ற உருவம் இதில் செதுக்கப்பட்டுள்ளது. அரச சின்னமாகிய சாமரைகளும் மங்கலத்தைக் குறிக்கிற சுவஸ்திகம், குத்து விளக்குகளின் உருவங்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளன. முத்திரையின் ஓரத்தில், பல்லவக் கிரந்த எழுத்துக்கள் தேய்ந்து அழிந்து காணப்படுகின்றன.

திருக்காட்டுப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட சிவன் கோயிலுக்கு அக்கிராமத்தைத் தானம் வழங்கிய செய்தியை இந்தச்