உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாசனச் செய்யுள் மஞ்சரி

சுந்தர பாண்டியன்

இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, திருப்புட்குழி, விஜயராகவப் பெருமாள் கோவில் முன் மண்டபத்துக் கிழக்கு மேடைச் சுவர்.

பதிப்பு : எண் 455. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஆறு. (No. 455. S.I.I. Vol. VI.)

விளக்கம் : இந்த மண்டபத்தை அமைத்தவர், எடுத்தகை அழகியான் பல்லவராயர் என்பவர். பெருமாள் குலசேகர தேவரான சுந்தர பாண்டியனை வாழ்த்துகிறது இந்தக்கவி.

சாசனச் செய்யுள்

வாழ்க கோயில் பொன்மேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்

வாழ்க சுந்தர மன்னவன் தென்னேய்.

பெருமாள் குலசேகர தேவர் திருத்தோளுக்கு நன்றாக. எடுத்தகை அழகியான் பல்லவராயர் செய்வித்த தன்மம்.

குறிப்பு :- பண்டைக் காலத்து வழக்கம்போல இச்செய்யுளில், ஏகார ஈற்றெழுத்து யகரமெய் பெற்றுள்ளது.

கோதண்டராமன்

இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, சின்ன காஞ்சீபுரம், அருளாளப் பெருமாள் (வரதராசப் பெருமாள்) கோவிலைச் சூழ்ந்துள்ள மண்டபங்களின் திண்ணைச் சுவரில் உள்ளது.