உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

27

பதிப்பு : எண் 853. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு (No. 853. S.I.I. Vol. IV.)

விளக்கம் : வசனமாக எழுதப்பட்ட ஒரு சாசனத்தின் அடியில் இந்தச் செய்யுள் காணப்படுகிறது.

சாசனச் செய்யுள்

கூர்வேல் வல்ல கோதண்ட ராமன் குலோத்துங்கன் பேரால் பணித்தமைக்கும் விச்சையம்மன் சேரமான் வங்கத்தே துங்க வடகொல்லம் கொண்டமைக்கும் சங்கத் தருங்கடலே சான்று.

மணியன் பெருங்கன்

இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, மாகறல் வைகுண்டபெருமாள் கோவில் மண்டபத்தின் தென்புறச் சுவரிலும், தாயார் சந்நிதி வாயிலின் மேற்புறத்திலும் எழுதப்பட்டுள்ள செய்யுட்கள்.

பதிப்பு : எண்கள் 437, 438. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ழு. (Nos. 437, 438. S.I.I. Vol. VII.)

விளக்கம் : இராஜராஜ சோழனின் 23-ஆம் ஆண்டில், பட்டியர் போயன் மணியன் என்பவர் இக்கோவிலில் திருப்பணிகள் செய்ததை முதல் செய்யுள் கூறுகிறது.

அண்டம்பாக்கிழான் திருவன் என்பவர், முருகன் கோவிலைக் கட்டியதாக இரண்டாவது செய்யுள் கூறுகிறது.

இந்த முருகன் கோவில் இப்போது தாயார் சந்நிதியாக இருக்கிறது. முன்பு, முருகன் திருவுருவம் இங்கு இருந்ததாகவும், பிற்காலத்தில் அவ்வுருவம் இவ்வூர்ச் சிவன் கோவிலுக்குக் கொண்டு போகப் பட்டதாகவும் கூறப்படுகிறது. முருகன் இருந்த ஆலயத்தில் இப்போது மடைப்பள்ளி நாச்சியார் என்னும் உருவம் வைக்கப் பட்டிருக்கிறது. இதற்குப் பூசைக் கிடையாது. ஆனால், இந்த முருகன் லயம் இப்போது தாயார் சந்நிதி என்று பெயர் கூறப்படுகிறது. இந்த