உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

303

துவங்குகிறது. பிறகு காணி மனைகளைக் குறிப்பிடுகிறது: அடிமைகளின் பெயர்களையும் கூறுகிறது. அப் பெயர்களாவன: தேவி, அவள் மகள் சீராள், இவள் தம்பி மக்கனாயன், இவனுடைய சிறிய தாய் ஆவுடையாள், இவள் தம்பி சீரானத்தேவன், இவள் மருமகள் சீராள் பெரியநாச்சி மகன் திருமய்ய மலையாளன், சிவத்த மக்கள் நாயகன் ஆகப் பேர் எட்டு. “வளத்திமகள் மன்றி, இவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகன் பொன்னன், விளத்தி மகன் வில்லி இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப்பட்ட சமுத்த விருத்திகளும் தானாதான விக்கிரயங்களுக்கு உரித்தாவதாக” என்று முடிகிறது இந்தச் சாசனம்.

புத்த ஜாதகக் கதைகளில் அடிமைகள் விற்கப்பட்டதும் வாங்கப் பட்டதும் ஆன செய்திகள் கூறப்படுகின்றன.

நமது நாட்டு அடிமை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதினால் அது ஒரு பெரிய புத்தகமாகும். சிலப்பதிகாரத்திலும் தொல் காப்பியத்திலும் கூட அடிமைகளைப் பற்றியக் குறிப்புகள் காணப் படுகின்றன. அடிமை முறை தமிழர் சமுதாயத்தில் மிகப் பழைய வழக்கமாகக் காணப்படுகிறது. இது பற்றிப் பல்கலைகழக மாணவர் ஆராய்ச்சி செய்யலாமல்லவா?

நடைவாவி உற்சவம் என்றால், காஞ்சீபுர வட்டாரத்தில் பலருக்கும் தெரியும்: ஆனால் அதைப்பற்றி வெளி உலகத்தில் பலருக்குத் தெரியாது. காஞ்சிபுரத்துக்கு ஏழு மைல் தூரத்தில் ஐயங்குளம் என்னும் இடம் பெரிய வெட்ட வெளியான இடம். கண்ணுக் கெட்டிய தூரம் பரவிக் கிடக்கிற இவ்வெளியிலே, ஒண்டுவதற்கு ஒரு மரமேனும் கிடையாது. வெட்டவெளியான இந்தப் பொட்டற் காட்டிலேதான், பாலைவனத்துக்கு மத்தியில் ஒயசிஸ் போல, இந்த நடை வாவிக் கிணறும் மண்டபமும் இருக்கின்றன. இந்த நவீன காலத்திலே விஞ்ஞானத்தின் உதவியினால் Air Conditioned Room என்று அறைகளைக் குளிர்ச்சியாக அமைத்துக் கொள்கிறார்கள் அல்லாவா? இது போன்று பண்டைக் காலத்தில் நமது நாட்டு சிற்ப கலைஞர் எல்லோருக்கும் பொதுவாக இயற்கையாக அமைத்துக் கொடுத்த குளிர்ச்சியான மண்டபந்தான் இந்த நடைவாவி மண்டபம். தரை மட்டத்துக்குக் கீழே பத்து அடி ஆழத்தில் அமைக்கப் பட்டிருப்பதாலும் அதன் மத்தியில் குளம் அமைந்திருப்பதாலும்,