உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

இம்மண்டபம் நல்ல வெய்யிலிலும் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.

தரை மட்டத்திற்குக் கீழே அமைந்திருப்பதனால் இந்த மண்டபம் இருப்பதே தெரியாது. இந்த மண்டபம் இருக்கிற இடத்தைத் தெரிவிப்பது தன்னந்தனியே நிற்கிற அழகான தோரணவாயில் வெட்டவெளியிலே நிற்கிற இந்த தோரண வாயிலையடைந்தால் தான் நடை வாவியைக் காணலாம். இதை நடை வாவிக் குளம் என்றும் நடை வாவிக் கிணறு என்றும் கூறுகிறார்கள். ஏறக்குறைய பத்து அடி சதுரமாக அமைந்த குளம் இது. இச்சிறு ‘குளத்தைச் சுற்றிலும் சுமார் 8 அடி அகலமும் 8 அடி உயரமும் உள்ள கருங்கல்லினால் அமைந்த சுற்று மண்டபம் உள்ளது. அதற்குச் செல்ல ஒரு பக்கத்தில் மட்டும் படிகள் அமைந்துள்ளன. இது தான் நடைவாவி. நடை வாவி என்பது நடை வாவி என்று மருவி விட்டது.

மண்டபத்துக்குள்ளே எல்லா நாட்களிலும் போக முடியாது. னென்றால் தரை மட்டத்துக்கு அடி பத்துக்குள் போக முடியும். ஆண்டுக்கு ஒரு முறை நீரை இறைத்து விட்டு மக்கள் மண்டபத்துக்குள்ளே போகிறார்கள். அன்று அம்மண்டபத்துக்குள்ளே வரதராச பெருமாள் எழுந்தருளுகிறார்.

தமிழருக்கு சித்திரா பௌர்ணமி முதன்மையான சிறந்த நன்னாள். வேனிற்காலத்திலே, சித்திரை மாதத்திலே முழுநிலா நாளாகிய பௌர்ணமி இரவு தனிச் சிறப்புடையது. அன்று பல நிகழ்வுகளும், பூசைகளும், உற்சவங்களும் நடைபெறும். சித்திரா பௌர்ணமி இரவிலே நடைபெறுகிற ஐயங்குளத்து நடை வாவி உற்சவ காஞ்சீபுர வட்டத்திலே அழகான சிறந்த திருவிழாவாகும்.

உற்சவத்துக்கு முந்திய நாள் நடை வாவியில் நிறைந்திருக்கிற தண்ணீரை எஞ்சின் மூலமாக இறைத்து விடுகிறார்கள். முற்காலத்தில் ஏற்றம் போட்டுத் தண்ணீரை இறைப்பது வழக்கம். நீரை இறைத்து விட்ட பிறகு, மண்டபம் காலியாகி, மத்தியில் உள்ள குளத்தில் மட்டும் நீர் நிறைந்திருக்கும். அப்போது படிகளின் வழியாகப் போய் மண்டபத்திற்குள் உலாவலாம்.

சித்திரா பௌர்ணமியன்று காஞ்சீபுரத்திலிருந்து வரதராசப் பெருமாள் ஏழு மைல் தூரத்திலுள்ள ஐயங்குளத்திற்கு வந்து