உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மழிவுகண்டான் சேரன் அளப்பரிய ஆற்றற்

கிழிவுகண்டான் தொண்டையர்கோ னுற்று.

15

தில்லைப் பெரிய திருச்சுற்று மாளிகை

எல்லைக் குரைவரைபோ லீண்டமைத்தான் - தொல்லைநீர் மண்மகளைக் கங்கோன் மதிக்குடைக்கீழ் வீற்றிருத்தி உண்மகுழும் தொண்டையர்கோ னுற்று.

16

புட்கரணி கல்சாத்து வித்தான்பொற் கோயிலின்வாய் விக்கரணம் பார்ப்படந்ததன் மேல்விதித்து - திக்களவு மாநடத்திக் கோல்நடத்தும் வாள்கூத்தன் மண்ணில்லறம் தாநடத்தில் நீடுவித்தான் தான்.

17

வீதிசூழ் நல்விளக்கும் வீற்றிருக்க மண்டபமும் மாதுசூழ் பாதமும் மகுழ்ந்தார்க்குப் - போதுசூழ்

தில்லைக்கே செய்தான் திசைகளிறு போய்நிற்கும் எல்லைக்கே செல்கலிங்க ரேறு.

நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச் செந்தேனின் னிடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் - கடங்கார் கருமாளி கைய்மேல் பகடுதைத்த கூத்தன் திருமாளிகை யமைத்தான் சென்று.

18

19

எவ்வுலகும் எவ்வுயுரு மீன்று மெழிலழியாச்

செவ்வியாள் கோயில் திருச்சுற்றைப் - பவ்வஞ்சூழ் எல்லைவட்டன் தங்கோற் கியல்விட்ட வாட்கூத்தன் தில்லைவட்டத்தே யமைத்தான் சென்று.

20

வாளுடைய பொற்பொதுவின்மன் நடந்தன னடமாடும் ஆளுடைய பாவைக் கவிஷேகம் - வேளுடைய பொற்பினான் பொன்னம்பலக் கூத்தன் பொங்குசட வெற்பினாற் சாத்தினான் வேறு.

21

சேதாம்பன் வாயுமைக்குந் தில்லையந் தேவிக்கும்

பீதாம்பரஞ் சமைத்தான் பேரொலிநீர் - மோதா

வலைகின்ற வெல்லை யபயனுக்கே யாக

மலைகின்ற தொண்டையார் மன்.

22