உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

33. செஞ்சிக் கலம்பகம்

153

தொண்டை நாட்டில் செஞ்சி என்னும் ஊரில் இருந்த ஒரு தலைவன் மேல் பாடப்பட்ட நூல் செஞ்சிக் கலம்பகம் என்பது. இதனைப் பாடியவர் புகழேந்திப் புலவர். இச்செய்திகளைத் தொண்டமண்டல சதகச் செய்யுளினால் அறியலாம்.

'காரார் களந்தைப் புகழேந்தி சொன்ன கலம்பகத்தின் நேரான நையும்படி யென்ற பாடலின் நேரியர்கோன்

சீராகச் செப்பிய நற்பாடல் கொண்டவன் செஞ்சியர்கோன்

மாராபி ராமனங் கொற்றந்தை யூர்தொண்டை மண்டலேமே' செஞ்சிக் கலம்பகத்திலிருந்து ஒரு செய்யுளைத் தொண்ட மண்டல சதக சிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது:

'நையும் படியென் நாங்கொற்ற நங்கோன் செஞ்சிவரைமீதே ஐயம் பெறு நுண்ணிடைமடவாய் அகிலின் தூபமுகிலன்று பெய்யுந் துளியோ மழையன்று பிரசத்துளியே பிழையாது வையம் பெறினும் பொய்யுரைக்க மாட்டார் தொண்டை நாட்டாரே.' இந்நூல் இப்போது கிடைத்திலது.

34. சேயூர் முருகன் உலா

9

சேயூர் முருகப்பெருமான்மீது கவிராசர் என்பவர் இயற்றிய ஓர் உலா உண்டென்பது, அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழினால் தெரிகிறது. அந்தகக் கவி வீரராகவ முதலியார், தாம் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், அம்புலிப் பருவம் 10ஆம் செய்யுளில் குறிப்பிடுகிறார். அச்செய்யுள் பின்வருவது:

66

"தவிராத வெவ்வினை தவிர்க்கு முருகாறுந்

தரித்தா றெழுத் தோதலாஞ்

சந்நிதிக் கருணகிரி நாதன் திருப்புகழ்ச்

சந்தம் புகழ்ந் துய்யலாம்.

புவிராசன் வளவன் கழுக்குன்றன் வளமைபுரி புண்ணியந் தரிசிக் கலாம்

பொருஞ்சூ ரனைப்பொருங் கதைமுதற் கந்தப் புராணக் கடற் காணலாம்.