உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கவிராச னிப்பிரான் மிசைசெய்த திருவுலாக்

கவிவெள்ளை கற்றுருகலாம்

கவிவீர ராகவன் சொற்றபிள் ளைக்கவி

கலம்பகக் கவி வினவலாம்.

அவிராட கக்கோவில் புக்குவிளை யாடலாம்

அம்புலீ யாட வாவே

மயில்வனச் செய்கையின் மயில்வகைக் கந்தனுடன் அம்புலீ யாட வாவே.

அச்செய்யுள், கவிராசன் என்னும் புலவர் சேயூர் முருகன் உலா என்னும் நூலை இயற்றிய செய்தியைக் கூறுகிறது. கவிராசன் என்பவர், சேறைக் கவிராசபிள்ளை என்பவர். ஆசுகவிராயர் என்னும் சிறப்புப் பெயரையும் உடையவர். சுன்னாகம் திரு. அ. குமாரசுவாமிப் புலவர் அவர்கள், தாம் இயற்றிய தமிழ்ப் புலவர் சரித்திரத்தில் இவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

"சேறைக் கவிராசபிள்ளை. இவரூர் சோழமண்டலத்துள்ள சேறை என்றும், குலம் கருணீகர் குலம் என்றும் கூறுவர். சமயம் சைவம். இவர் இலக்கிய இலக்கணங்கள் நன்கு கற்றவர். ஆசு கவிராயர் என்னும் பேரும் பெற்றவர் சேயூர் முருகனுலா, வாட் போக்கிநாதருலா, அண்ணா மலையார் வண்ணம், காளத்திநாதருலா முதலிய பிரபந்தங்கள் செய்தவர். இப்பிரபந்தங்கள் சிலவற்றிலே சிலேடை, மடக்கு, திருக்கு முதலிய அணிகளும் அமைத்தவர்.’

99

சேயூர் முருகன் உலா இப்போது மறைந்து விட்டது. இந்நூல் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. 35. தசவிடுதூது

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (1815-1876) அவர்கள் தானப்பாசாரியார் என்பவர்மீது இயற்றியது தசவிடுதூது. அன்னம், மயில், கிள்ளை, மேகம், நாகணவாய்ப்புள், பாங்கி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு என்னும் பத்துப் பொருட்களைத் தூதுவிட்டதாகக் கூறப்படுகிற அகப்பொருள் இலக்கியநூல் இது. இந்நூல் இப்போது கிடைக்கவில்லை.