உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

163

சமய வாதத்தைப்பற்றியே பௌத்த ஜைன நூல்களுக்குக் கேசி நூல்கள் என்பது பெயர்.

இந்த நூல்களைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

58. புட்கரனார் மந்திர நூல்

இப்பெயருள்ள நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப் பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40 ஆம் சூத்திர உரையில், ஆரிடப்போலி அல்லது ஆரிட வாசகம் என்பதைக் கூறும்போது இவ்வாறு கூறுகிறார் :-

“வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை நெற்றிநேர் வாங்கல் விலங்கறுத்தல் உட்சக்கர வட்டத் துட்புள்ளி யென்பதே புட்கரனார் கண்ட புணர்ப்பு.

இது மந்திர நூலுட் புட்கரனார் கண்ட வெழுத்துக்குறி வெண்பா. இஃ திரண்டாமடி குறைந்து வந்தது.

دو

இதனை ஆரிட வாசகம் என்பதனாலே ரிஷிவாக்கு என்பது தெரிகிறது. ஆரிட வாசகம் - இருடி வாக்கு.

இந்த மந்திர நூலை இயற்றிய புட்கரனார் யார், அவர் வரலாறு என்ன என்பது தெரியவில்லை.

இந்நூலைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.

59. மஞ்சரிப்பா

இப் பெயருள்ள ஒரு நூல் இருந்ததென்பதைத் தொண்டை மண்டல சதகத்தினால் அறிகிறோம்.

'வானப்ர காசப் புகழ்க்கிருட்டின ராயர்க்கு மஞ்சரிப்பா

கானப்ர காசப் புகழாய்ந்து கச்சிக் கலம்பகஞ்செய்

ஞானப்ர காச குருராயன் வாழ்ந்து நலஞ்சிறந்த

மானப்ர காச முடையோர் வளர்தொண்டை மண்டலமே’

என்பது அப்பாடல்.

காஞ்சீபுரத்தில் ஞானப்பிரகாசர் மடத்தின் தலைவராய் இருந்த வரும், கச்சிக் கலம்பகம் இயற்றியவருமான ஞானப் பிரகாசர் என்னும்