உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

183

சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையின் 12ஆம் வரி, “இருவகைக் கூத்து என்பதன் உரையில்.

66

و,

'குணத்தின் வழியதகக் கூத்தெனப் படுமே

என்னும் குணநூற் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். குணநூல் ஆசிரியரின் பெயர் முதலியன தெரியவில்லை. அடியார்க்கு நல்லார் காலத்தில் சிதைந்துபோன இந்நூல் இக்காலத்தில் அடியோடு மறைந்து விட்டது.

5. குருக்ஷேத்திர நாடகம்

யாழ்ப்பாணத்துக் காரைத்தீவில் இருந்த முருகேசையர் (கி.பி. 1774-1830) என்பவர் இந்நூலை இயற்றினார். இவர் தமிழ் வடமொழி இரண்டிலும் வல்லவர். இவர் இயற்றிய குருக்ஷேத்திர நாடகம் மறைந்து விட்டது.

6. கூத்தநூல்

இது கூத்துப் பற்றிய நாடகநூல். இந்நூலை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார்:

“கூலம் எண்வகைத்து, அவை: நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி: பதினெண் வகைத் தென்பர் கூத்தநூலார். (சிலம்பு., பதிகம், உரை) 'எண்வகைக் கூலமாவன. “நெல்லுப் புல்லு வரகுதினை சாமை இறுங்கு தோரையொடு, கழைவிளை நெல்லே' எனவிவை. இனிக் கூலம் பதினெண் வகைத் தென்பர் கூத்தநூலாசிரியர்."

66

(சிலம்பு., இந்திர விழா, வரி 23 உரை) இந்நூலைப் பற்றி வேறொன்றும் தெரியவில்லை. கூத்த நூலும் மதிவாணனார் நாடகத் தமிழ்நூலும் ஒரு நூல் என்று சிலர் கருதுகின்றனர். 7. சந்தம்

இது கூத்து சம்பந்தமான ஒரு நாடகத்தமிழ் நூல். இந்த நூலை யாப்பருங்கல உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். யாப்பருங் கலம், ஒழிபியலில், உரையாசிரியர் இந்நூலை இவ்வாறு குறிப்பிடுகிறார்: