உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

"வெண்டுறை வெண்டுறைப் பாட்டாவன; பதினோராடற்கும் ஏற்ற பாட்டு. அவை அல்லியம் முதலியவும் பாடல்களாக ஆடுவாரையும், பாடல்களையும், கருவியையும் உந்து இசைப்பாட்டாய் வருவன

இனி இவற்றினுறுப்பு ஐம்பத்து மூன்றாவன: அல்லிய உறுப்பு 6, கொடுகொட்டி யுறுப்பு 4, குடையுறுப்பு 4, குடத்தினுறுப்பு 5, பாண்டரங்க உறுப்பு 6, மல்லாடலுறுப்பு 5, துடியாடலுறுப்பு 6, கடையத்துறுப்பு 6, பேட்டின் உறுப்பு 4, மரக்காலாடல் உறுப்பு 4, பாவையுறுப்பு 3 எனவிவை. இவற்றின் தன்மை செயிற்றியமும், சந்தமும், பொய்கையார் நூலும் முதலியவற்றுட் காண்க. ஈண்டுரைப்பிற் பெருகும்.

இதனால், சந்தம் என்னும் இந்நூல், பதினோராடற்கும் ஏற்ற பாட்டுகளின் இலக்கணங்களைக் கூறும் நூல் என்பது தெரிகிறது.

பதினாறு வகையான ஆடல்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்திலும், அதன் உரையிலும் கண்டுகொள்க.

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

8. சயந்தம்

இதுவும் ஒரு நாடகத் தமிழ் நூல். இந்நூலைப் பற்றி அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் பின்வருமாறு கூறுகிறார்:

66

'நாடகத்தமிழ் நூலாகிய பரதம் அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்.

و,

இவ்வாறு எழுதிய அடியார்க்குநல்லார், சிலப்பதிகாரம், அரங் கேற்று காதை, 12ஆம் அடி "இருவகைக் கூத்து” என்பதன் உரையில் சயந்த நூலிலிருந்து ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டியுள்ளார்:

66

'அகத்தெழு சுவையா னகமெனப் படுமே

என்றார் சயந்துநூ லுடையாருமெனக் கொள்க

என்று அவர் எழுதுகிறார்.

அடியார்க்கு நல்லார் காலத்திலேயே சிதைந்துபோன இந்நூல் இப்போது முழுவதும் மறைந்துவிட்டது.