உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

இளம்பூரண அடிகள் தாம் எழுதிய தொல்காப்பியம், மெய்ப் பாட்டியல் முதல் சூத்திர உரையில் செயிற்றிய நூலிலிருந்து கீழ்க் காணும் சூத்திரங்களை மேற்கோள் காட்டுகிறார்:

“மத்திம மென்பது மாசறத் தெரியிற் சொல்லப் பட்ட வெல்லாச் சுவையொடு புல்லா தாகிய பொலிவிற் றென்ப.

நயனுடை மரபி னிதன்பய மியாதெனிற் சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கு மொப்ப நிற்கு நிலையிற் றென்ப.

உய்ப்போ னிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவ ரறிவரொடு பிறருங்

காமம் வெகுளி மயக்க நீங்கிய

1

2

வாய்மை யாளர் வகுத்தனர் பிறரு

மச்சுவை யெட்டு மவர்க்கில வாதலி

னச்சுவை யொருதலை யாதலி னதனை

மெய்த்தலைப் படுக்கவிதன் மிகவறிந் தோரே.’

3

என்பது செயிற்றியச் சூத்திரம்.”

“இருவகை நிலத்தி னியல்லது சுவையே

என்றும்,

நின்ற சுவையே

...

ஒன்றிய நிகழ்ச்சி சத்துவ மென்ப

என்றும்,

4

சத்துவ மென்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்த னடுக்கங் கடுத்தல் வியர்த்த றேற்றங் கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிய சத்துவந் தானே

என்றும் சார்பொருள் உரைப்ப.

5

(தொல்., பொருள்., மெய்ப்பாட்டியல்,