உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

(மெய்ப்பாடு)

189

1ஆம் சூத்திரம், இளம்பூராண அடிகள் உரை மேற்கோள்)

“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன்

மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே.

6

(தொல்., பொருள்., மெய்ப்பாட்டியல், 3ஆம் சூத்திரம், இளம்பூரண அடிகள் உரை மேற்கோள்)

நகையெனப் படுதல் வகையா தெனினே நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே.

(நகைச்சுவை)

“உடனிவை தோன்று மிடமியா தெனினே முடவர் செல்லுஞ் செலவின் கண்ணு மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணுங் கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை யிகழ்ச்சிக் கண்ணு மற்று மொருவர்கட் பட்டோர் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணு மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண்பிரி தன்மை யலியின் கண்ணு மாண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணுங் களியின் கண்ணுங் காவாலி கண்ணுந் தெளிவிலா ரொழுகுங் கடவுளார் கண்ணு மாரியர் கூறுந் தமிழின் கண்ணுங் காரிகை யறியாக் காமுகர் கண்ணுங் கூனர் கண்ணுங் குறளர் கண்ணு

وو

7

மூமர் கண்ணுஞ் செவிடர் கண்ணு

மான்ற மரபி னின்னுழி யெல்லாந் தோன்று மென்ப துணிந்திசி னோரே.'

8

(தொல்., பொருள்., மெய்ப்பாட்டியல்,

4ஆம் சூத்திரம், இளம்பூராண அடிகள் உரை மேற்கோள்)