உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

கொடிநகர் புகுதலுங் கடிமனை விரும்பலுந் துயிற்க ணின்றி யின்பந் துய்த்தலு மயிற்கண் மடவா ராடலுண் மகிழ்தலு

நிலாப்பயன் கோடலு நிலம்பெயர்ந் தறைதலுங் கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலு மொருங்கா ராய்ந்த வின்னவை பிறவுஞ் சிருங்கா ரம்மென வேண்டுப விதன்பயன் றுன்ப நீங்கத் துகளறக் கிடந்த

வின்பமொடு புணர்ந்த வேக்கழுத் தம்மே.

191

11

(தொல்., பொருள்., மெய்ப்பாடு, 11ஆம் சூத்திரம்,

இளம்பூரணர் உரை மேற்கோள்.)

11. சோமகேசரி நாடகம்

இந்நாடக நூலை இயற்றியவர் மாப்பாண முதலியார் என்பவர் (கி.பி. 1777-1827). இவருக்கு, இருமரபும் துய்ய குலசேகரப் புதுநல்ல மாப்பாண முதலியார் என்னும் பெயரும் உண்டு. இவர் யாழ்ப் பாணத்துத் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த மட்டுவாள் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தென்மராட்சியில் மணியகார உத்தியோகம் செய்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் கற்றவர். இவர் இயற்றிய சோமகேசரி நாடகம் மறைந்துபோயிற்று.

12. ஞானாலங்கார நாடகம்

யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில் வாகனப் புலவர் இயற்றியது இந்நூலை. இவர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இருந்தவர். தமிழ் நாட்டிலிருந்து போய் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய ஞானாலங்கார நாடகம் இப்போது மறைந்துவிட்டது.

13. திருநாடகம்

திருநெல்வேலி மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா, ஆத்தூரில் உள்ள சோமநாதேசுவரர் கோவில் சாசனம் ஒன்று இந்நாடகத்தைக் கூறுகிறது. திருமேனி பிரியாதாள் என்னும் நாடக மகள், திருநாடகத்தை ஆவணி மாதத்துத் திருவிழாவில் ஒரு நாள் நடிப்பதற்காக 2மா நிலம் அவளுக்குத் தானம் வழங்கப்பட்டது. பாண்டியன் திரிபுவனச் சக்கர