உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வர்த்தி கோனேரின்மைகொண்டான் என்னும் அரசனுடைய 5ஆம் ஆண்டில் எழுதப்பட்டது இந்தச் சாசனம்; கி.பி. 13ஆம் நூற்றாண்டு.3 திருவிழாவில் நடிக்கப்பட்ட இந்தத் திருநாடகம், யாரால் எழுதப்பட்டது. எந்தக் கதையைக் கூறுகிறது. என்பன தெரியவில்லை.

சிலம்பு அரங்கேற்று காதை முதல் அடியாகிய "தெய்வமால் வளரத் திருமுனி யருள” என்பதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையில் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள்காட்டி “நூன் முகத்து” உள்ளது என்று கூறுகிறார். நூல் முகம் என்பது நூல் என்னும் இந்நூலின் பாயிரம் ஆக இருக்க வேண்டும். அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய இதே செய்யுளை, அரும்பதவுரை யாசிரியரும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அவர் இச் செய்யுள் எந்த நூலைச் சேர்ந்தது என்று கூறவில்லை. அடியார்க்குநல்லார் மட்டும் இச் செய்யுள் நூன்முகத்தது என்று கூறுகிறார். இவர்கள் மேற்கோள் காட்டும் செய்யுள் இது:-

"திருந்திய பொதியி லருந்திற லகத்தியன் சுந்தர மணிமுடி யிந்திரன் மகனை மாளு விறலோய் வேணு லாகென விட்ட சாபம் பட்ட சயந்தன்

சாபவிடை யெமக்கரு டலத்தோ யென்று மேவினன் ஒருமுது மேதக வுரைப்ப வருந்தவ மாமுனி தமிழ்கூத் தியர்க்குந்

திருந்திய தலைக்கோற் றானத் தீருமென்

றவனினி துரைப்ப லாசிவந் தனனேன்

இச் செய்யுள் நூல் என்னும் நூலின் பாயிரச் செய்யுட் பகுதியாக இருக்கக்கூடும்.

14. நூல்

நூல் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது இறையனார் அகப்பொருள் உரை, அடியார்க்கு நல்லார் உரை, மயிலைநாதர் உரை என்னும் உரைநூல்களினால் தெரிகிறது. இறையனார் அகப் பொருள் உரையாசிரியர், உரைப்பாயிரத்தில் எழுதுவது வருமாறு:

“நூற்பெயரென்பது நூலது பெயர் என்றவாறு. நூல் பெயர் பெறு மிடத்துப் பல்விகற்பத்தாற் பெயர் பெறும்: என்னை? செய் தானாற் பெயர் பெறுதலும், செய்வித்தானாற் பெயர் பெறுதலும், இடுகுறியாற் பெயர்பெறுதலும் அளவினாற் பெயர் பெறுதலும், சிறப்பினாற் பெயர்