உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

மாலையிட் டுச்சுற்றி வட்டமிட் டோடி வரவழைத்து வேலைவிட் டுக்குத்தி வெட்டுவ ளாகில் விலக்கரிதே.

ஆரா யிரங்கொண்ட வைவே லசதி யகன்கிரியி னீராடப் போகு னெறிதனியே யந்தி நேரத்திலே

சீரான குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்ததொருபெண் போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே.

ஆய்ப்பாடி யாயர்தம் ஐவே லசதி யணிவரையில்

கோப்பா மிவளெழிற் கொங்கைக்குத் தோற்றிளக் கோடிரண்டுஞ் சீப்பாய்ச் சிணுக்கரி யாய்ச்சிமி ழாய்ச்சின்ன மோதிரமாய்க் காப்பாய்ச் சதுரங்க மாய்பல்லக் காகிக் கடைப்பட்டவே.

ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமே னீடுங் கயற்கண்ணி யாடந்த வாசை நிகழ்த்தரிதாற் கோடுங் குளமுங் குளத்தரு கேநிற்குங் குன்றுகளுங் காடுஞ் செடியு மவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.

3. அண்ணாமலைக் கோவை

23

6

7

00

9

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அண்ணாமலை நாதர் பேரில் பாடப்பட்டது. அண்ணாமலைக் கோவை. இதனை இயற்றியவர் கமலை ஞானப்பிரகாசர். இவர் இயற்றிய வேறு சில நூல்கள் இப்போதும் உள்ளன. ஆனால், அண்ணாமலைக் கோவை மறைந்து போயிற்று. இது கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

4. அரையர் கோவை

இந்நூலைக் களவியற் காரிகை உரையாசிரியர். தமது உரையில் குறிப்பிடுகிறார். இக்கோவையிலிருந்து ஒரு செய்யுளையும் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். அச்செய்யுள் இது:

பாக்கத் திரவின்கட் பட்டதொன் றுண்டுபைங் கானலெங்கும்

சேக்கைத் துணைத்தலை யோடொன்றுஞ்

சேர்ந்தில சேர்ந்துசெங்கை

தாக்கச் சிவந்த தடந்தோட்

டயாபரன் றஞ்சையன்னாய்