உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

'சிதைவெனப் படுமவை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில் கூறல் மயங்கக் கூறல் கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல்

பழித்த மொழியா னிழுக்கக் கூறல் தன்னா னொருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினு மனங்கோ ளின்மை அன்ன பிறவு மவற்றுவிரி வாகும்’

279

(தொல். பொருள். மரபு)

ரு

எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக் கூறல். குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில கூறல். மயங்க கூறல், தன்னானொரு பொருள் கருதிக் கூறல்” என்னும் குற்றம் பயக்கக் கூறினாரென வருமாகலான் (தொல். பொருள் புறத்திணை, வேந்து விடு முனைஞர்' என்னும் சூத்திர உரை)

தொல்காப்பியத்துக்கு மாறுபட்ட கருத்துகளையுடைய சூத்திரங்கள் பன்னிருபடலத்துள் கூறப்பட்டுள்ளதை இளம்பூரண அடிகள் எடுத்துக் காட்டி, அப் பன்னிருபடலச் சூத்திரங்கள் தொல் காப்பியரால் இயற்றப் பட்டன. அல்ல என்பதை மேலும் விளக்குகிறார்:

66

‘பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு (தொல்காப்பியர்க்கு) மாறாகக் கூறலும் மயங்கக் கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாத லான் உய்த்துணர்ந்து கண்டு கொள்க.'

(தொல். புறத்திணையியல், 'வெறியறி சிறப்பின்' என்னும் சூத்திர

உரை).

இதனால், சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்திலே, சிலர் புது வகையால் சில சூத்திரங்களைச் செய்து அவற்றைத் தொல்காப்பியர் முதலிய பன்னிருவர் பெயரால் பன்னிருபடலம் என்னு பெயரிட்டு அமைத்துக்கொண்ட நூல் பன்னிரு படலம் என்பது தெரிகிறது. ஆனால், இந்நூல் இடைக் காலத்திலே பெரிதும் பயிலப்பட்டது