உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -15

என்பதும் தெரிகிறது. இப்போது இந்நூல் மறைந்து விட்டது. இதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பாமாலை இப்போது வழங்கிவருகிறது. 32. பாடலம்

பாடலனார் என்பவர் தமது பெயரால் பாடலம் என்னும் ஒரு இலக்கண நூலை இயற்றினார் என்பது, யாப்பருங்கல விருத்தியினால் தெரிகிறது. யாப்பருங்கலம், ஒழிபியலில் விருத்தியுரைகாரர் இந்நூற் சூத்திரம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது:-"முப்பத்திரண்டு தந்திரவுத்தியாவன:

நுதலிப் புகுத லோத்துமுறை வைத்தல் தொகுத்துக் காட்டல் வகுத்துக் காட்டல் முடிவிடங் கூறல் முடித்துக் காட்டல்

தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த லிரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்த லெடுத்த மொழியி னெய்த வைத்த லின்ன தல்ல

திதுவென மொழிதல் தன்னின முடித்தல் எஞ்சிய சொல்லின் எய்தக் கூறன் மாட்டெறிந் தொழிதல் பிறநூன் முடிந்தது தானுடன் படுத றன்குறி வழக்க

மிகவெடுத் துரைத்த லிறந்தது விலக்கல் எதிரது போற்றன் முன்மேற் கோடல் பின்னது நிறுத்த லெடுத்துக் காட்டல்

முடிந்தது முடித்தல் சொல்லின் முடிவின்

அப்பொருண் முடித்த றொடர்ச்சொற் புணர்த்தல்

யாப்புறுத் தமைத்த லுரைத்து மென்றல் விகற்பத்து முடித்த றொகுத்துடன் முடித்தல்

ஒருதலை துணித லுய்த்துணர வைத்தல்

என விவை பாடலனாருரை.

وو

(இது நன்னூல் 14-6-8 தொல். பொருள் 478-484 காண்க.)

இந்நூலைப்பற்றியும் இதை இயற்றிய பாடலனாரைப் பற்றியும் வேறு செய்திகள் தெரியவில்லை.