உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

நீலக் கருந்தடங்கண் ணித்தில வெண்ணகைக்குக் கோலத் தளிர்வண்ணங் கூட்டுமே-வேல

வெறியாருந் தார்க்கண்டன் மேவாரில் வாட மறியாடு கொல்லும் வழக்கு.

10. காரி கோவை

29

9

காரி கோவை என்பது காரி என்பவரால் செய்யப்பட்டது. இந்தக் காரியார், பெரியபுராணத்தில் கூறப்படுகிற காரி நாயனார் ஆவார். இவர் திருக்கடவூரில் இருந்த சிவபத்தர்: தமிழ்ப் புலவர். இவர் சிவபெருமான் மீது செய்யுள் பாடினார் என்று நம்பியாண்டார் நம்பி தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் கூறுகிறார்:

66

“புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவுஞ் சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி

வில்லனை வாழ்த்தி விளங்குங் கயிலைபுக் கானென்பரால் கல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே3

இவர் சிவபெருமான்மேல் இயற்றிய செய்யுளுக்குக் காரிகோவை என்பது பெயர் என்றும், சொல் விளங்கிப் பொருள் விளங்காத முறையில் இது இயற்றப்பட்டதென்றும், சேரசோழ பாண்டிய அரசர்களிடம் இக் கோவையைக் கொண்டுபோய் ஓதிப் பொருள் உரைத்து அவர்கள் வழங்கிய பொருளைக் கொண்டு காரியார் சைவத்தொண்டு செய்து வந்தார் என்றும் சேக்கிழார் அடிகள் தமது பெரியபுராணத்தில் கூறுகிறார்:

"மறையாளர் திருக்கடவூர் வந்துதித்து வண்டமிழின்

66

துறையான பயன்தெரிந்து சொல்விளங்கிப் பொருள்மறையக் குறையாத தமிழ்க்கோவை தம்பெயரால் குலவும்வகை முறையாலே தொகுத்தமைத்து மூவேந்தர் பாற்பயில்வார்.

'அங்கவர்தாம் மகிழும்வகை அடுத்தவுரை நயமாக்கிக் கொங்கலர்தார் மன்னவர்பால் பெற்றநிதிக் குவைகொண்டு வெங்கண் அரா வொடுகிடந்து விளங்கும்இளம் பிறைச்சென்னிச் சங்கரனார் இனிதமருத் தானங்கள் பலசமைத்தார்”

என்பன பெரியபுராணம், காரிநாயனார் புராணச் செய்யுள்கள்.

காரிநாயனார் இயற்றிய காரிகோவை இப்போது கிடைக்க வில்லை.