உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

‘குறிலு நெடிலு மளபெடையு மொற்று

மறிஞ ரசைக்குறுப்பா மென்பர் - வறிதே

யுயிர்மெய்யு மூவினமென் றோதினா ரென்று செயிரவர்க்கு நின்றதோ சென்று’

எனவும்,

"

-

‘வடாது தெனாதென்று வைத்ததனான் மற்றாண் டெடாதனவுஞ் சொற்றா ரினத்தாற் கெடாததுபோன் மஃகான் குறுக்கம் வகுத்ததனான் மாட்டெறிந்தா ரஃகாய்தந் தானு மசைக்கு’

எனவும்,

'ஐயௌமவ் வென்றிவற்றிற் காங்குற்ற ஞாபகமா நையாது கார நடத்தாதே - மெய்யானே கற்றாய்ந்த நூலோ ரிகரம் புணர்ந்ததூஉம் குற்றாய்தந் தானுங் கொளற்கு'

எனவும்,

7

00

9

'சிறப்புடைய வல்ல வெனவிவற்றுட் கொள்ப

சிறப்புடைய வென்பவே சிந்தித் - துறுப்பசைக்கட் காலளவா மொற்றினையுங் கைக்கோடல் காரணமாக நூலளவிற் சொற்றார் நுனித்து’

10

எனவும்,

‘ஐம்மூ வெழுத்து மசைக்குறுப்பா மென்பதன்கண் உம்மைதா மெச்ச மெனவுரைப்பர் - ஐம்மூன்றின்

மிக்கனவுங் கைக்கோடல் வேண்டி வியன் பொருளை மெய்ப்படுக்கு மாங்கே விதப்பு.’

11

எனவும்,

‘மகரக் குறுக்கம் வகுத்ததுதா னாய்தற்

கிகரக் குறுக்க முதலாப் புகரற்ற

-

நாலொன்று மெண்ணாதே நாட்டுதன் ஞாபகமாய்

நூலொன்றி நிற்றற் பொருட்டு’

12