உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

பரதசாஸ்திரம்:

321

பரத சேனாபதீயம் என்னும் நூலின் உரையாசிரியர் தமது உரையில் இந்த நூலைக் குறிப்பிடுகிறார். மேற்படி நூல் 23ஆம் சூத்திரத்தின் உரையில் இவ்வுரைாயசிரியர், “என்னாற் சொல்லப்பட்ட முதனூல் பரத சாஸ்திரமும் மற்றை வேத வேதாந்த சாஸ்திரமும்” என்று எழுதுகிறார். இதனால், இப்பெயரையுடைய ஒரு நூல் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலை மறைந்துபோன நூல்களுடன் சேர்க்கவேண்டும். பரத சேனாபதீயம்:

இந்நூல், இப்பெயரையுடைய பழைய நூலின் வேறானது. அடியார்க்கு நல்லாரும் நச்சினார்க்கினியரும் கூறுகிற, ஆதிவாயிலார் இயற்றிய யாக சேனாபதீயம் அன்று இது. அதற்குப் பிற்பட்ட நூல். இதை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. நூலும் முழுவதும் கிடைக்க வில்லை. நூலின் பாயிரங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இதற்கு உரையும் உண்டு. உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இது டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் நூல்நிலைய வெளியீடாக வெளிவந்துள்ளது.

பாரிபாடல்: இறையனார் அகப்பொருள்:

நானூறும்

எழுபது பரிபாடலும்

---

وو

உரையாசிரியர், முதல் சூத்திர உரையில் இவ்வாறு எழுதுகிறார்: 'இனிக் கடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும் ... கணக் காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மரென்ப அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை என்று இத்தொடக்கத்தன. பேராசிரியர் என்னும் உரையாசிரியர் (தொல்., பொருள்., செய்யுள் 149). "இனி நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தாரால் தொகுக்கப்படடவற்றுள்;' என்று எழுதுகிறார். இதனால் பரிபாடலின் தொகை எழுபது என்பது தெரிகிறது. ஒரு பழைய வெண்பாவும், பரிபாடல் செய்யுள்கள் எழுபது என்று கூறுகிறது. ஆனால், இப்போது கிடைத்துள்ள பரிபாடல் செய்யுள்கள் இருபத்து நான்குதாம்: நாற்பத்தாறு செய்யுள்கள்

66

காணப்படவில்லை.

பாரத வெண்பா:

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்தில், பெருந்தேவனார் என்பவரால் இயற்றப்பட்டது இந்தப் பெருந் தேவனார், பாரதம் பாடிய பெருந்தேவனாருக்குப் பிற்காலத்தில் இருந்தவர். இந்நூல் உத்தியோக