உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பருவம், வீடும பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களையுடையது. துரோண பருவத்தில் பதின்மூன்றாம் நாட்போர் வரையிலும் இருக்கிறது. இதிலும் பிற்பகுதிச் செய்யுள்கள் காணப்படவில்லை. மற்றப் பகுதிகளும் காணப்படவில்லை.

புறநானூறு:

இதில், கடவுள் வாழ்த்துச் செய்யுளோடு 400 செய்யுள்கள் உள்ளன. இவற்றுள் 267, 268 எண்ணுள்ள செய்யுள்கள் முழுவதும் காணப்படவில்லை. 282, 283, 285, 289, 290, 298 எண்ணுள்ள செய்யுள்களில் சில அடிகளில் எழுத்துகள் மறைந்து விட்டன. 300 முதல் 400 வரையில் உள்ள செய்யுள்களுள் 40 செய்யுள்களில் சில வரிகளில் எழுத்துகள் சிதைந்துவிட்டன.

பெருங்கதை:

உதயணன் கதை என்றும், மாக்கதை என்றும் இதற்குப் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்குவேள் என்பவர். சிறந்த காவிய நூல், இவ்வருமையான நூலின் முதலும் இறுதியும் காணப்படவில்லை. இடையிலும் சில அடிகள் மறைந்து விட்டன. இந்நூல், உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்னும் ஐந்து காண்டங்களையுடையது. முதலாவது உஞ்சைக் காண்டத்தில் முப்பத்தொரு காதைகள் காணப்படவில்லை. முப்பத்திரண்டாவது காதையின் முற்பகுதியும் காணப்படவில்லை. இடையில் மகத காண்டத்தில் 10ஆம் காதையின் கடைசியில் சில அடிகளும், பதினோராம் காதை முழுவதும், 12 ஆம் காதையின் முற் பகுதியும் காணப்படவில்லை. 17 காதையின் சில பகுதியும் காணப்பட வில்லை. இறுதியாகிய நரவாண காண்டத்தில் ஒன்பது காதைகள் மட்டும் உள்ளன. 9ஆம் காதையின் பிற்பகுதியும் மற்றக் காதைகளும் காணப்படவில்லை.

மாபரதம்:

ம்

இதனை இயற்றியவர் சிங்காரசேகரர் என்பர். இது சார்பு நூல். பிற்காலத்து நூலாகிய பரத சேனாபதீயத்தின் நூலாசிரியர், மேற்படி நூல் பாயிரத்தின் 68ஆம் சூத்திரத்தில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். இதை மறைந்துபோன நூல்களுடன் சேர்க்க வேண்டும்.