உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

மாபரத சூடாமணி:

323

இது மேற்படி மாபரதம் என்னும் நூலைச் சுருக்கிச் செய்யப்பட்ட நூல் சோமநாதன் என்பவருக்காக இதைச் சிங்காரசேகரன் என்பவர் இயற்றினார் என்று பரதசேனாபதீயப் பாயிரச் செய்யுள் (63) கூறுகிறது. இதையும் மறைந்துபோன நூல்களுடன் சேர்க்க வேண்டும்.

முத்தொள்ளாயிரம்:

சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று அரசர்பேரில் இயற்றப் பட்ட நூல். முத்தொள்ளாயிரம் என்னும் பெயரைக் கொண்டு (மூன்று தொள்ளாயிரம்) 2,700 செய்யுள்களை யுடைய நூல் என்று சிலர் கருது கின்றனர். மூன்று முந்நூறு ஆகத் தொள்ளாயிரம் செய்யுள்களைக் கொண்ட நூல் என்று கருதுவது பொருந்தும் எனத் தோன்றுகிறது. 900 செய்யுள் உள்ள இந்த நூலில் இப்போது கிடைத்துள்ளவை 110 செய்யுள்கள் மட்டுமே: மற்றவை மறைநது விட்டன.

மூத்தபிள்ளையார் மும்மணிக்கோவை:

பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலை இயற்றி யவர் அதிராவடிகள் என்பவர். முப்பது செய்யுள்களுடைய இந்நூலின் கடைசி ஏழு செய்யுள்கள் (24 முதல் 30 வரையில்) மறைந்துவிட்டன.