உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

21. திருமறைக் காட்டந்தாதி

இந்த அந்தாதியைப் பாடியவர், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் இருந்தவரும், சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பருமான சேரமான் பெருமாள் நாயனார். இவருக்குக் கழறிற்றறிவார் என்னும் பெயரும் உண்டு. சேரமான் பெருமாளும் சுந்தரமூர்த்தி நாயனாரும் திருமறைக் காட்டுக்குச் சென்றார்கள். சுந்தரர் பதிகம் பாடினார். சேரமான் பெருமாள் நாயனார், திருமறைக்காட்டந்தாதியைப் பாடி அங்கு அரங்கேற்றினார். இச்செய்தியைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் கூறுகிறது:

நிறைந்த மறைகள் அருச்சித்த

நீடு மறைக்காட் டருமணியை இறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து

போற்றி யாழைப் பழித்தென்னும்

அறைந்த பதிகத் தமிழ்மாலை

நம்பி சாத்த அருட்சேரர்

சிறந்த அந்தா தியிற்சிறப்பித்

தனவே யோதித் திளைத்தெழுந்தார்.

கழறிற்றறிவார் நாயனார் புராணம், 87)

இந்த அந்தாதியைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 22. தில்லையந்தாதி

சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது இயற்றப்பட்ட அந்தாதி நூல் இது. அகப்பொருள் துறையமைந்த செய்யுள்களைக் கொண்டது என்று தோன்றுகிறது. இந்நூல் ஆசிரியர் பெயர், காலம் முதலியன தெரியவில்லை. இந்நூலிலிருந்து ஒரு செய்யுளைக் களவியற் காரிகை யுரையாசிரியர் தமது உரையில் மேற் கோள் காட்டியுள்ளார். அச்செய்யுள் இது:

தொடிவா னரமங்கை யன்றிமைக் குங்கண்கள் தோயுநிலத் தடிவா னரந்த மலரும் புலரு மயன்றலையைத்

தடிவா னரன் ... ... தாழ்சடை யோன்றில்லை யூசல்வல்லிக் கொடிவா னரம்புரி யும்பொழில் வாய்வந்த கோல்வளைக்கே.