உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

மங்கையர்தங் கண்ணால் மயங்கினார் வெள்ளெலும்புந் துங்க வெருக்குந் தொடுத்தணிந் - தங்கமெலாம்

வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும்

வந்தேறி யூர்வர் மடல்.

16

செம்ம லொருவன் செறிபூந் தழையேந்தி

மம்மர் பெருகி வனப்பழித்து - நம்முடைய

நன்பூம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற் றென்பூங் குழலா யியம்பு.

17

வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும்

பொங்குந் திரையும் பொருகடலு - மிங்கிவை

தேர்த்திரளுங் காலாளுந் திண்களிறும் வெம்பரியும் போர்க்களமும் போலும் பொலிந்து.

18

-

வட்ட முலையில் மலர்க்கண்ணில் வார்குழலிற் பட்ட படியைப் பகர்வதோ - கந்தநறுங் கூந்தற் கனங்குழைக்குக் காவலநீ தந்தநறுஞ் சாரற் றழை.

தாது விரிபொழிலுந் தண்டுறையும் புண்டரிகப் போது விரிகமழ்நீர்ப் பொய்கைகளு - மீது

மட்டுவிரி

19

நெருங்குங் குருகினமு நெஞ்சுருக நம்மை

யுருக்குந் தனியிடமொன் றுண்டு.

20

முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியா

னொல்லை வருவ னொருபொருப்பன் - றில்லைநகர்

ஆரணங்கே யிங்கேநி லங்கே வரின்மன்னுஞ்

சூரணங்கே செய்யுந் தொடர்ந்து.

21

எவ்விடத் தென்செய்த தென்றறியே னிப்போதைக்

கிவ்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே - வெவ்வினையேன் இன்னலே கூர வினிதளித்தார் தேரின்பின்

நென்னலே போனவென் னெஞ்சு.

22

அன்னை நெருந லணியிழையாள் கொங்கையையும்

என்னையும் நோக்கி யிருவரையும் - புன்னை

வளையாடு கானல்வாய் மானனையீர் இன்று

விளையாட லென்றாள் விரைந்து.

23