உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

அம்புமுகங் கிழித்த புண்வாய்க் கலைமான் போந்தன வுளவோ வுரையீர்

மாமட னோக்க மரீஇனம் படர்ந்தே.

புனையிழை யாயமொடு பூம்பந் தெறியவும் நனைமயிர் ஞாழ லொள்வீ கொய்யவும் வருந்தினள் கொல்லோ மடந்தை பிரிந்தன்று மாதோ பண்புகெழு நிறனே.

பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலின மகவு நாடன்

49

00

9

நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.

10

கையது செம்மலந் தழையே வினாவது

தெய்ய புண்வாய் மாவே கைவிட்

டகலா னம்மவிவ் வகன்புனந்

தகையோ னுள்ளிய தறியோம் பெரிதே.

11

பொன்னியல் சுணங்கின் மென்முலை யரிவைக்கு

மின்னிவ ரொளிவே லண்ணல்

நின்னுறு விழுமங் கூறுமதி நீயே.

12

அலவனோ டாடலு மாடாண் மாடு

மலர்ப்பூங் கானல் வண்டலு மயரா

ளோவியப் பாவை யொத்தனள்

யாதுகொ லண்ணல்யான் சொல்லு மாறே.

13

குன்றின் சுனையிற் குளித்தோ குளிர்காவி

லொன்ற மலர் கொய்ய வோடியோ - வன்றாயின்

மற்றின்றா துண்டோ மலர்வல்லி வாடியதின்

றெற்றினா லாமா றிது.

14

வில்வேறு பட்ட படியே வினைவேறு

சொல்வேறு பட்டபடி தோற்றுவிக்க - மல்வேறு போகாத தோளும் பொலிவழிய நம்புனம்விட் டேகாத தென்கொ லிவர்.

15