உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

27. பொருளியல்

அகப்பொருளைக் கூறும் இந்நூற் செய்யுள்கள் களவியற் காரிகை யுரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் முதலியன தெரியவில்லை. இந்நூற் செய்யுள்கள் சிலவற்றைக் கீழே தருகிறோம்:

நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும் பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே யன்ன தலையளி யுடைமையி

னின்னுயிர்த் தோழி யேந்திழை யிவட்கே.

1

உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண் டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர் வழுத்தூர் காக்கு மாபுணை

விழுத்துணைக் கான்ற மிகுபெருங் கிளையே.

2

பொருந்தா தம்ம புனையிழை மடந்தை முருந்தேர் முறுவ னோக்கிள்

வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே,

ஆய்தளிர் பொதுளிய வீததை

காய்கதிர் நுழையாக் கடிபொழில்

யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே.

தனிமை நெஞ்சத்து முனிவுகண் டகற்றலின் வினைமாண் பாவை யன்ன

புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே.

தெய்வ மாக வையுறு நெஞ்சம் பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து கிளிபுரை கிளவியாம் பெறுக

வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே.

காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி பூவிரிந் தன்ன கூந்தலும்

வேய்புரை தோளு மணங்குமா லெம்மே.

3

4

LO

5

6

7