உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கழற்கா லிளையோ னழற்றிகழ் வெகுளி

இகழ்த லோம்புமின் புகழ்சால் மன்னிர்

தொல்லை ஞான்றைச் செருவினு ளிவன்கை

வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின் அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம்

பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே

அதனால்

வல்லோர் பூழை நின்மின் கல்லென

வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின்

அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோ னிலையே.

34

உண்டது

கள்ளு மன்று களிப்பட் டனனே

ஊர்ந்தது

புள்ளு மன்று பறந்தியங் கும்மே மேலோர்

தெய்வ மல்லன் மகனே நொய்தாங்குத் தெரியல ரெடுத்த பாசிலைக் கண்ணி வெருவத் தக்க வேலி னோன்வேல்

பைய நிமிர்ந்து பருந்தி னோடிக்

கழிந்தார்த் தன்றவ னெறிந்ததை கழறொட்

டேந்துவரை யிவரும் புலிபோல்

வேந்தர்வந் தூரும் வெஞ்சினக் களிறே.

நிலையமை நெடுந்திணை யேறி நல்லோரி னிலைபொலி புதுப்பூண் கணவனொ டூடிச் சிந்தி யன்ன செருபடு வனப்பிற் புள்ளிக் காரி மேலோன் தெள்ளிதின் உள்ளினும் பனிக்கு மொருவே லோனே குண்டுநீர்க் கிடங்கிற் கெண்டை பார்க்கும் மணிநிறச் சிறுசிரல் போலநம்

அணிநல் யானைக் கூறளக் கும்மே.

வருக வருக தாங்கன்மின் தாங்கன்மின் உருவக் குதிரை யொருவே லோனே

இருகை மாக்களை யானஞ் சலனே

35

36