உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

முஸ்லிம்கள் அதிகமாகப் புத்தகங்களை வெளியிட்டார்கள் இதற்குக் காரணம் 19-ம் நூற்றாண்டிலேதான் நமதுநாட்டிலே அச்சுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு முன்பு அச்சுக்கூடங்களெல்லாம் பாதிரிமாரிடத்திலும் அரசாங்கத்தாரிடத்திலும் இருந்தன. நம் நாட்டவருக்கு அச்சுயந்திரம் வைக்கும் உரிமை 19-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிறகுதான் இந்துக்களும் முஸ்லிம்களும் நமது மத நூல்களை அச்சுப்புத்தகமாக அச்சிடத் தொடங்கினார்கள்.

وو

17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ் நாட்டில் நவாப்புகளின் ஆட்சி ஏற்பட்டிருந்தது என்று கூறினோம். நவாப்புகள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். நவாப்புகளின் ஆட்சிக் காலத்தில் உருது மொழியும் பாரசீக மொழியும் அரசாங்க மொழியாக இருந்தன. முஸ்லிம் களின். “தெய்வ பாஷை அரபு மொழியாக இருந்தது. ஆகவே, அவர்கள் குர்ஆன் வேதத்தைப் படிப்பதற்காக அரபு மொழியையும் அரசியலை நடத்துவதற்காக உருது, பாரசீக மொழிகளையும் பயின்றார்கள். ஆகவே தமிழ் மொழியிலும் அரபி உருது பாரசீக மொழிச் சொற்கள் சில கலந்தன. பேச்சு வழக்கிலுள்ள பாஷையில், சமயம் அரசியல் வாணிகம் முதலிய காரணமாக வேறு மொழிச் சொற்கள் கலப்பது இயற்கைதானே. 19-ஆம் நூற்றாண்டிலே, நவாப்பு களின் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய பிறகும், அரசியல் சம்பந்தமாக முன்பு வழங்கி வந்த பாரசீக உருது அரபிச் சொற்கள் வழங்கிவந்தன. தமிழில் கலந்த அந்த மொழிச் சொற்கள் பேச்சு வழக்கில் அதிகமாகவும் இலக்கிய வழக்கில் குறைவாகவும் உள்ளன. ஆனால் இஸ்லாம் மதச் சார்பாகத் தமிழில் எழுதப்பட்ட நூல்களில் அரபுச் சொற்கள் சற்று அதிகமாகவுள்ளன.

முஸ்லிம் தமிழர் தமிழில் புதிதாக அமைத்துச் செய்த இலக்கியம் நொண்டி நாடகம் என்பது. நொண்டி நாடகம் என்னும் பெயரில் சில நூல்கள் தமிழில் உள்ளன. பாரசீக மொழியிலிருந்து தமிழில்மொழி பெயர்க்கப்பட்ட அரபிக் கதைகள் பேர் போனவை.

இஸ்லாம் மதச் சார்பாக அரபுமொழிச் சொற்களும் முஸ்லிம் அரசாட்சிச் சார்பாக உருது பாரசீக மொழிச் சொற்களும் தமிழில் கலந்தன என்று கூறினோம். அவற்றிற் சிலவற்றைக் காட்டுவோம்.

66

'குறவர் மகட்குச் சலாமிடற்கு ஏக்கறு