உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

திரு. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்படும் “பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்' என்னும் நூலினைப் படித்துப் பார்த்து மிக்க மகிழ்ச்சி எய்தினேன். திரு. சீனி.வேங்கடசாமி அவர்கள் பல அரிய பனுபவல்கள் முன்னரே தந்து தமிழகத்திற்குப் பெருந்தொண்டாற்றிய அறிஞர். சாசனச் செய்யுள் மஞ்சரி போனற் நல்ல பல நூல்களின் ஆசிரியராகிய திரு.சீனி வேங்கடசாமி அவர்கள் இப்புத்தகத்தைப் பொதுவியல் சிறப்பில் ஒழிபியல் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தின் நிலையைப் பற்றி நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். இப்புத்தகத்திலிருந்து அறியக்கூடிய உண்மைகள் பல உள. அவற்றுள் சில பின்வருவன :-

சிலப்பதிகாரத்தை 1872-இல் சுப்பராய செட்டியார் வெளியிட்டார் என்பதும், டாக்டர் உ.வே. சாமிநாரைதயர் 1892-இல்அதனை வெளியிடுதற்கு முன்னர்ப் புகார்க் காண்டம் மாத்திரம் 1876-ல் திரு. சீனிவாச ராகவாச்சாரி யாரால் வெளியிடப்பட்டது என்பதும் ஒன்று. மணிமேகலை என்னும் காப்பியம் 1894-இல் வித்வான் மயிலை, சண்முகம்பிள்ளை அவர்களால் முதன்முதல் வெளியிடப்பட்டது என்பது ஒன்று. திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயரும், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரும் சேர்ந்து 1857-இல் திருவாசகத்தை முதன் முதல் அச்சிட்டுத் தந்தார்கள் என்பதும் ஒன்று.

டாக்டர் திரு.உ.வே. சாமிநாதையர் சங்க இலக்கியங்கள் பற்றியும் சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி பற்றியும் சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் தூண்டுதலால் ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டார் என்பதை இந்நூலாசிரியர் சான்றுகளுடன் எடுத்து விளக்கியுள்ளார். திருநெல்வேலிக் கவிராச நெல்லையப்ப பிள்ளை, ஈசுவரமூர்த்தி பிள்ளை ஆகியவர்கள் உதவியினால் ஏட்டுச்சுவடிகள் பல டாக்டர் சாமிநாதையர் அவர்களுக்குக் கிடைத்தன என்பது எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. தமிழ்ச் சுருக்கெழுத்து திரு. அரிகிருட்டின படையாட்சி அவர்களால் 1898-இல் கும்பகோணத்தில் முதன்முதல் வெளியிடப் பட்டது என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு