உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

19

நூல்களில் இன்னிலை என்ற ஒரு நூல் இல்லை என்பதும், கைந்நிலை என்ற நூல்தான் உண்டு என்பதும் பத்தொன்பதாவது நூற்றாண்டிற் செய்யப்பட்ட பெரிய ஆராய்ச்சிகளால் முடிவு காணப்பட்டது என்பதை நூலாசிரியர் இந்நூலகத்தும் ஒழிபியலிலும் எடுத்து விளக்கியுள்ளார். பத்தொன்பதாவது நூற்றாண்டில் அச்சான புத்தகங்களில் அட்டவணை பக்கங்கள் 266 முதல் 273 வரை உள்ளவற்றில் தரப்பட்டுள்ளது. பத்தொன்பதாவது நூற்றாண்டில் வெளியான உரைநடை நூல்களின் சிறு பட்டியல் ஒன்றும், இந்நூற்றாண்டில் வெளியான தமிழ்நாடக நூல்களின் சிறு பட்டியல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் இலகயீகய வரலாற்றை அறிய முற்படுவோருக்குப் பெரிதும் பயன்படும். பக்கம் 189 முதல் 215 வரை உள்ளவற்றிற் காணப்படும் புலவர்களுடைய பிறந்த ஆண்டு மறைந்த ஆண்டும் உறுதியாகத் தெரியவில்லை என ஆசிரியர் கூறியுள்ளார். இப்புலவர்கள் தோன்றி மறைந்த காலங்கள் ஆராயத்தக்கன. நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டைப் பற்யிதானாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ாேன்றி இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த புலவர் சிலரைப் பற்றிக் கூறியுள்ளது. (பக்கங்கள் 216-217.)

ஆசிரியர் சிலரது மாணவர் பரம்பரையினைக் காட்டும் விளக்கப் படங்கள் நூலிற்கு அணி செய்கின்றன.

கிறித்தவத் தொண்டர்களும் முஸ்லீம் புலவர்களும் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த தொண்டுகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அராபிய எண்ணுமுறை என்பது பண்டைய தமிழ்எண்ணு முறைதான் என்பதைக் காரணத்தோடு நூலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்து தமிழிலக்கியத்திற்குத் தொண்டாற்றிய அறிஞர் பலருடைய தொண்டுகள் நூலகத்தே விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூற்றாண்டைப் பற்றியும் இத்தகைய ஆராய்ச்சி வெளியீடுகள் வெளிவருதல் விரும்பத்தக்கது. திருமயிலை சீனி. வேங்கடசாமி அவர்களுடைய அறிய உழைப்பின் பயனாகக் கிடைத்துள்ள இத்தமிழ்ப்பெருஞ் செல்வத்தைத் போற்றுவார்கள் என்று நம்புகறேன் சென்னை -5.

12-5-62.

தமிழ்ப்பெரு

மக்கள்

அ.சிதம்பரநாதன்,

தலைமையாசிரியர்

ஆங்கிலத் தமிழ்ச சொற்களஞ்சியம், சென்னைப் பல்கலைக்கழகம்