உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

பழந்தமிழ் நூல்களைப் படிக்கவும் இலக்கிய ஆராய்ச்சி செய்யவும் என்னுடைய இளமைக் காலத்தில் வாய்ப்புகள் கிடைத்தன. என்னுடைய தமயனார் திரு.மயிலை சீனி. வோவிந்தராசனார் அவர்கள் பழைய இலக்கியங்களைப் படிப்பதிலும் தமிழ் நூல்களைப் பிறருக்குப் பாடஞ் சொல்லுவதிலும் புதிதாகச் செய்யுள் புனைவதிலும் காலங்கழித்தார். அந்தச் சூழ்நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய எனக்குப் பழைய தமிழ் நூல்களைப்பற்றி அறிவதற்கு ஆர்வமும் ஆசையும் ஏற்பட்டது. எங்கள் வீட்டில் எங்கள் முன்னோர் சேர்த்து வைத்திருந்த அச்சுப் புத்தகங்களும் ஏட்டுச் சுவடிகளும் - அவை அதிகமானவையல்லவாயினும் போதிய அளவு கணிசமானவை என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. எங்கள் வீட்டுக்கு அருகிலே புலவர் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் ஒரு பெரிய தமிழ் நூல்நிலையம் வைத்திருந்தார். அவர் பெயர் திரு.சே. சோமசுந்தரம் பிள்ளை என்பது. அவர் பழைய அச்சுப் புத்தகங்களைச் சேர்த்து வைப்பதில் ஊக்கமும் ஆர்வமும் உடையவர். அவர் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்று அந்த நூல்களையெல்லாம் பார்ப்பது உண்டு. இச்சூழ்நிலைகள் என்னுடைய இளைய உள்ளத்தில் தமிழ் இலக்கியங்களைப் படிக்க ஆர்வத்தை வளர்த்தன. என்னுடைய இருபதாவது வயதுக்குள்ளேயே தமிழில் உள்ள இலக்கண இலக்கிய நூல்களையெல்லாம் அறிந்து கொண்டேன். அறிந்துகொண்டேன் என்றால், அவற்றை யெல்லாம் படித்தேன் என்பது கருத்தல்ல.. அந்நூல்களையெல்லாம் அறிமுகம் செய்து கொண்டேன் என்பதுதான்.

காலம் சுழன்றது. மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுள் முக்கியமானவை மூன்று குறிப்பிடத்தக்கவை. என்னுடைய தமிழ் மொழியார்வத்தை வளர்த்து வந்த என்னுடைய தமையனார் என்னுடைய இருபத்து மூன்றாவது வயதில் காலமானது ஒன்று. என் னுடைய வீட்டிலிருந்த நூல்கள் சிறிது சிறிதாக மறைந்து போனது மற்றொன்று. பல அச்சுப்புத்தகங்களை மிக அருமையாகச் சேர்த்து வைத்திருந்த நான் அடிக்கடி சென்று படித்து வந்த நூல் நிலையத்தின் தலைவர் - திரு. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் சில ஆண்டுகளுக்குப்