உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழுவூர் வேலாயுத முதலியார் (1832-1889)

189

தொண்டை நாட்டுத் தொழுவூர் இவருடைய ஊர். பிற்காலத்தில் சென்னையில் வசித்தார். சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளின் மாணவராயமர்ந்து அவரிடம் தமிழ் மொழியை நன்கு கற்றார். இவர் காலத்தில் நிகழ்ந்த அருட்பா மருட்பாக் கட்சிகளில், மருட்பாக் கட்சியார் எழுதி வெளியிட்ட, 'போலியருட்பா மறுப்பு' என்னும் நூலுக்கு மறுப்பாக வேலாயுத முதலியார், 'போலியருட்பா மறுப் பென்னும் குதர்க்காரண்ய நாகமசாபரசு' என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

"

இராமலிங்க சுவாமிகள் மறைந்த பிறகு, சென்னை இராச தானிக் கல்லூரியில் வேலாயுத முதலியார் தமிழாசிரியராக அமர்ந்தார். இவர் வடமொழியிலும் வல்லவர். இவர் இயற்றிய வசன நூல்கள்: பராசரஸ் மிருதி (ஆசார காண்டம்), சங்கர விஜய வசனம், மார்க் கண்டேய புராண வசனம், பெரிய புராண வசனம், வேளாண் மரபியல், திருவெண்காட்டடிகள் வரலாறு, யோகவித்தை, விநாயக சதுர்த்தி விரதம், போசராசன் சரிதம், மகாவீர சரித்திரம்.

டை

செய்யுள் நூல்கள்: திருப்பாதப்புகழ்ச்சிமாலை, திருப்பதத் திருப்புகழ்மாலை, திருக்கழற் பல்லாண்டுமாலை, சித்திர யமகவந்தாதி, திருத்தணிகைச் சித்திரமாலை, திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருத்தணிகை வெண்பாவந்தாதி, திருத்தணிகை நான்மணிமாலை, திருத்தணிகை மும்மணிக்கோவை, திருத்தணிகை இரட்ை மணிமாலை, திருத்தணிகைக் கலம்பகம், திருப்போரூர்க் கலி விண்ணப்பம், திருப்பதி யழகாயிரத்தந்தாதி, அடைக்கல மாலை, அபயமாலை, சந்நிதி முறையீட்டுமாலை, மகிழ்மாக் கலம்பகம், வடிவுடையம்மன் சவுந்தரியாட்டகம், தசகமாலை, சீவஞான பாலைய தேசிகர் மும்மணிக்கோவை, நெஞ்ச ராற்றுப்படை, தாதகுருநாதர் கலிமாலை, திருவருட்பிரகாசர் சந்நிதிமுறை முதலியன.

குலாம் காதிறு நாவலர் (1833-1908)

இவர் நாகூரில் பிறந்தவர். நாகை நாராயணசாமி பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலியவர்களிடத்தில் தமிழ் பயின்றார். பினாங்கு சென்று அங்கு, 'வித்தியா விசாரிணி' பத்திரிகையை நடத்தினார். நபிநாயகத்தின் மீது மும்மணிக்