உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

வேங்கடரமண தாசர் (?-1900)

213

கோயமுத்தூருக்கு வடக்கேயுள்ள சாமக்குளம் இவருடைய ஊர், கோயமுத்தூர் கந்தசாமி முதலியாரின் மாணவர். கந்தசாமி முதலியார் எழுதிய கிள்ளைவிடு தூது என்னும் நூலுக்கு மறுப்பாகக் கிறிஸ்துவர் சிலர் பிள்ளைவிடுதூது என்னும் நூலை வெளியிட்ட போது. அப்பிள்ளைவிடு தூதுக்கு மறுப்பாக வேங்கடரமணதாசர். “பிள்ளைவிடுதூது ஆபாச விளக்கம்' என்னும் நூலையும் ‘சிசு தௌத்திய திரணசண்டமாருதம்' என்னும் நூலையும் எழுதினார், கந்தசாமி முதலியார் இயற்றத் தொடங்கிய கொடுமுடிப் புராணம் நிறைவேறாமற் போனதை இவர் பாடி முடித்து நிறைவேற்றினார். கார்த்திகேய முதலியார் (?-1907)

காஞ்சிபுரத்துக்கு அடுத்த மாகறல் இவர் ஊர், கிண்டி தியாலஜி கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். கச்சி இதழகல் அந்தாதி, மொழிநூல் என்னும் நூல்களை இயற்றினார்.

இராமலிங்க சுவாமிகள் (1851?-1906)

ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் என்று கூறப்படுவார். தில்லை ஈசானிய மடத்தில் இருந்தவர். பாடம் சொல்லுவதிலும் உரை எழுதுவதிலும் சொற்பொழிவு செய்வதிலும் வல்லவர். பூண்டி அரங்கநாத முதலியாரின் நண்பர். நால்வர் நான்மணிமாலைக்கும் பழமலையந்தாதிக்கும் உரை எழுதினார்.

பூ

குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகள், பிரபந்தத்திரட்டு, திருவிளையாடற்புராணம், சீகாளத்திப் புராணம், முருகேசர் முதுமொழி வெண்பா முதலிய நூல்களை அச்சிற்பதிப் பித்தார்.

சுப்பராய செட்டியார் (?-1894)

இவர், சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று கூறப் படுவார். இவர் பாலக்கரை வீரராகவ செட்டியார் என்னும் வித்து வானுடைய மகனார். திரிசிரபுரத்தில் இருந்தவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர். பிள்ளையவர்களின் நண்பராகிய புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், திரிசிர புரத்தில் தங்கியிருந்தபோது, அவ்வூர்ப் பிரபுக்களும் வித்துவான்