உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

களும் முதலியார் அஷ்டாவதானம் செய்வதைப் பார்க்க விரும்பி னார்கள். அவர்கள் விருப்பத்தை மகாவித்துவான் பிள்ளையவர்கள் முதலியாரவர்களுக்குத் தெரிவித்தபோது, அவரும் அதற்கு இசைந்து அஷ்டாவதானம் செய்து காட்டினார். அதைக் கண்ட பிரபு ஒருவர், உங்கள் மாணவரை அவதானம் செய்யப் பழக்கமுடியுமா என்று மகாவித்துவானைக் கேட்க, அவர்கள் தம் மாணவராகிய சுப்பராய செட்டியாரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச் சோடசாவதானி என்னும் பட்டத்தையும் வழங்கினார். அதுமுதல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று பெயர் பெற்றார். சுப்பராய செட்டியார் தமது ஆசிரியருக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் குரு வணக்கமாக ஒவ்வொரு செய்யுளை எழுதுவது வழக்கம்.

சுப்பராய செட்டியார் சென்னை அரசாங்கத்து நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவராக இருந்தார். விரிஞ்சேகர் சதகம் என்னும் நூலை இயற்றினார். இந்நூலுக்கு இவருடைய ஆசிரியரான மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் அளித்த சிறப்புப் பாயிரம் இது:

மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்றொளிர

வான்மெல்

மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள

வாணியம் பதிதழைப்பப்

பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர் பொற்றரு

வினிற்றழைத்த

பூரணி யிடப்பரம காரணர் விரிஞ்சேசர் பொன்னங்

கழற்கணியெனப்

பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பா

லேற்றவர்

பாலெவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில் பரிவுற்று வந்துகேட்பத்

தூமேவு சொற்பொருள் நயம்பெறச் செய்தனன் துதிவீர

ராகவப்பேர்த்

தூயனருள் மைந்தன்நய மிகுசோட சவதானி சுப்பராயப்

புரவலனே