உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

இதற்குக் காரணம் இடைக் காலத்திலே இந்நூல்கள் சில தலைமுறையாகப் பயிலப்படாமல் போனதுதான் என்பதை முன்னரே கூறினோம்.

கு

சென்ற நூற்றாண்டிலே நிகழ்ந்த பதினெண் கீழ்க்கணக் நூல்களின் பெயரைப்பற்றிய ஆராய்ச்சி இக்காலத்தவராகிய நமக்கு வியப்பாகவும் வேடிக்கையாகவும் தெரிகின்றது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் பெயரை அறிவதற்கே அக்காலத்தவர் எவ்வளவு முட்டுப்பட்டுத் துன்புற்றனர் என்பது அவர்கள் எழுதியவற்றிலிருந்து நமக்குத் தெரிகிறது. சென்ற 19-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்து பல அரிய ஏட்டுச் சுவடிகளை அச்சுப் புத்தகமாகப் பதிப்பித்து வெளிப்படுத்திய பெரியார் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், தாம் 1887-ஆம் ஆண்டு பதிப்பித்த கலித்தொகை என்னும் நூலின் பதிப்புரையிலே கீழ்க்கணக்கு பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

நாலடி நான்மணி நானாற்ப தைந்தீணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைசொல் காஞ்சியுடன் ஏலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு’

"இவற்றுட் கோவை யென்றது ஆசாரக்கோவையை. முப்பா லென்றது திரிகடுகம் ஆசாரக்கோவை பழமொழி பஞ்சமூலம் ஆகிய போன்று நாலடி வெண்பாவால் இயன்று அக்காலத்திலே வழங்கிய மூன்று சிறு தரும நூல்களை யென்றும், இன்னிலை சொல் என்றது இன்னிலை இன்சொல் என்று பெயரிய இரண்டு நூல்கள் பெயரை என்றும் உத்தேசிக்கின்றேன். அன்றேல் ஐந்திணை அகப் பொருட்டு றைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஒர் நூலாக, இவர்க்குக் கீழ்கணக்குத் தொகை பதினெட்டாவ தெவ்வாறோ? இவ்விடர் நோக்கிப் போலுஞ் சிலர் ஐந்திணையை ஐந்தொகையென்று பாடம் ஒதுவர். அன்னோர் நெடுந்தொகை யொன்றொழிய வேறு தொகையின்மையிற் சட்டி சுட்டதென்று நெருப்பிற் பாய்ந்த கள்வனார் போலப் பின்னர் எட்டுத்தொகை நூல்காணாது பேரிடர்ப்படுவர். 'இன்னிலைய காஞ்சியுட னேலாதியென்பவே' என்னும் பாடமுண்டு. அதனால் இன்னும் இரண்டு மூன்றாவதன்றிக் கணக்குச் சரிபெறாது. இவ்வாறு கொள்ளாது சிலர் கோவை முப்பால்களை. வாதபுரீ சராகிய மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய திருச்சிற்றம்பலக்