உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

263

கோவையாருஞ் சங்கத்தாரைப் பங்கப்படுத்தி அழித்துவிட்ட தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது பொய்யாமொழித் திருக்குறளு மென்று மயங்கித்தடுமாறுப. பெயர்படைத்த வித்துவான்களுள்ளுஞ் சிலர் இவ்வாறு மயங்கினது நம்போலியரை மிக மயக்குகின்றது. இவ்விரண்டும் நமது தமிழ் வேத மென்றாவது சிந்தித்தாரில்லை. திருச்சிற்றம்பலமுடையார் கையெழுத்தா கீழ்க்கணக்கின் கீழ்ப்பட்டது!!! இதனை நிராகரிக்க அயற்சாட்சியும் வேண்டுமா? பன்னிரண்டு திருமுறைகளையும் ஒருங்கு சேர்த்துப் பத்தாக்கிவிட்டாரில்லை. மேலும், 'நாலடி நான்மணி' என்றற் றொடக்கத்துச் செய்யுள் யாரது? யார் காலத்தது? யாண்டையது? சங்கத்தார் காலத்துச் சங்கத் திருமுன்னர்ச் சங்கப்புலவருளொருவராற் சொல்லப்பட்டதென்பது உண்மையாயின், நாயனார் திருக்குறளின்பின் சங்கம் எங்கே இருந்தது?1 இருப்பினன்றோ குறளுங் கூட்டிக் கூறப்படும்?”

1887-ஆம் ஆண்டில் கலித்தொகைப் பதிப்புரையில் மேற் கண்டவாறு எழுதிய சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், இரண்டு ஆண்டுக்குப் பிறகு 1889-ஆம் ஆண்டில் இலக்கண விளக்கம் என்னும் நூலை அச்சிட்டபோது, அதன் பதிப்புரையில், பதினெண் கீழ்க்கணக்கு நூற்பெயர் ஆராய்ச்சியைப் பற்றி மேலும் தொடர்ந்து எழுதியுள்ளார். அவர் எழுதியதிலிருந்து அக்காலத்தில் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி எவ்வளவு தவறான கருத்துக்கள் இருந்தன என்பதை அறியலாம். இலக்கண விளக்கப் பதிப்புரையில் பிள்ளையவர்கள் எழுதுவது இது:

“ஸ்ரீ கொ. ஸ்ரீநிவாச ராகவாசாரியாரவர்கள் தாம் எழுதிய நாலடியார் நூல் வரலாற்றில்.

'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி'

என்பவற்றுள், 'ஐந்திணை அகப்பொருட் டுறைத்தாய் ஐம்பது செய்யுளான் மாறன் பொறையனார் இயற்றியது ஓர் நூலாகக், கீழ்க் கணக்குத் தொகை பதினெட்டாய தெவ்வாறோ?' என? யான் கொண்ட கொள்கை மாற, 'ஐந்திணை என்றது ஐந்திணைகளைப் பற்றிச் சொல்லும் ஐந்து நூல்கள்' எனக் கூறி, ஐந்திணையைம்பது ஐந்திணை எழுபது திணைமொழி யைம்பது திணைமாலை நூற்றைம்பது இன்னான்கும் அவ்வைந்திணையைச் சேர்ந்தன வென்றும் இவை போன்றது இன்னும் ஒன்று இருத்தல் வேண்டும் என்றும். சொற்றனர்.