உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

இலக்கணச் சுருக்க வினாவிடை யெனும்பெயர் நலத்தியை தரநிறீஇ நடையுற வகுத்தனன் சீர்பெறு தென்றிருத் தணிகைவாழ் செல்வன் சார்புறு வீர சைவ சிகாமணி

65

293

மலகருட் குறையுள் வரகுண மேரு

கல்விப் பெருங்கடல் கந்தப்ப தேசிகன்

அருந்தவப் பெரும்பே றாமென வுதித்த

பெருந்தகை விசாகப் பெருமா ளையனென்

றுலகு புகழ்தர வோங்கி

இலகு மியற்பெய ரெய்து நாவலனே.

நன்னூற் காண்டிகை யுரை

70

திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் நன்னூலுக் குக் காண்டிகை உரை எழுதி அச்சிட்டபோது, அதற்குச் சேயூர் முத்தைய முதலியார் அளித்த உரைப்பாயிரம்:

பூமலி துணர்ச்சினை பொதுளிய சந்தனக்

காமலி பொதியலிற் காட்சிகூர் நலத்திற் பற்பல முனிவரர் பணிசெயூ வருகுறச்

சிற்பர னடியுளஞ் சேர்த்திருந் தறநெறி முயலிசை யகத்திய முனிவனிற் றோன்றிய வியலிசை நாடக மெனுமிவை புலப்பட

5

நுதலிய வரும்பெற னோக்கமை யகத்திய

முதலிய வாயுள முத்தமிழ் நூல்களு

மவன்மா ணாக்கரீ ரறுவரி னோங்கிய

தவன்மா ணாக்கரில் சாய்த்ததொல் காப்பியன்

10

வழுவா யறத்தெரீஇ வகுத்ததொல் காப்பிய

மெழுவா யாகிய வியற்றமிழ் நூல்களுந் திங்கட் கவிகைசேர் தென்னவ னால்வளர்

சங்கப் பலகைவாழ் சான்றோர்க் களவையாய்க் குசைநுனி போன்மதிக் கூர்மையோர் தமக்கே யிசைதலி னிவைபோ லாதியா வருக்குந் தெளியிய னூல்களிற் சிறந்ததோர் நூலுக் கெளிதுண ருரையினி தியற்றித் தருகெனாப் புகழ்தரு பாற்கடற் பொங்கவங் கதனிடைத்

15